மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
புதிய சிக்கலில் விஜய் சேதுபதி; சீதக்காதி படத்திற்கு வலுக்கும் எதிர்ப்புகள்.!
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி விரைவில் திரைக்கு வர இருக்கும் சீதக்காதி படத்திற்கு இந்திய தேசிய லீக் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
விஜய் சேதுபதி தற்போது சீதக்காதி படத்தில் நடித்து முடித்துள்ளார். 'நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்' படத்தின் இயக்குநர் பாலாஜி தரணீதரன் எடுத்திருக்கும் படம், 'சீதக்காதி'. வயதான பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் இந்தப் படத்தில் அர்ச்சனா , ரம்யா நம்பீசன், பக்ஸ், பார்வதி நாயர், காயத்ரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு இப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்த நிலையில், இப்படத்திற்கு இந்திய தேசிய லீக் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தமிழர்களின் அடையாளமாக வாழ்ந்த சீதக்காதியின் பெயரை டைட்டிலாக வைத்துள்ளதால், எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்திய தேசிய லீக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொடையாளராக, தமிழ் கவிஞர்களின் புரவலர், அறிஞராக இருந்தவர் சீதக்காதி. பிறப்பில் ஒரு இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர். இவரது இயற்பெயர், ஷேக் அப்துல் காதர். சீறாப்புராணத்தை எழுதிய உமறுப்புலவர் மீது கொண்ட அன்பின் காரணமாக தனது பெயரை சீதக்காதி என்று மாற்றிக் கொண்டார்.
இவர், ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் 1698 வரையிலான காலகட்டத்தில் வாழ்ந்தவர். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சீதக்காதியின் பெயரை சினிமாவிற்கு வைத்ததை இந்திய தேசிய லீக் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. விஜய் சேதுபதி நல்ல நடிகர் தான். சீதக்காதி என்ற அறிஞருக்கு கலங்கும் வரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும். இல்லையென்றால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.