மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விஜய் சேதுபதியின் மனைவியை பார்த்துள்ளீர்களா! புகைப்படம் இதோ
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய் சேதுபதி. துணை நடிகராக சினிமாவில் காலடி எடுத்து வைத்த இவர் இன்று தமிழ் சினிமாவின் மிக முக்கிய நடிகர்களில் ஒருவராக மாறிவிட்டார். இவரது நடிப்பில் வெளிவரும் பெரும்பாலான படங்கள் மாபெரும் வெற்றிபெறுகிறது.
படத்தின் கதைக்கு ஏற்றவாறு தனது உடல் அமைப்பை மாற்றிவரும் விஜய் சேதுபதி சமீப காலமாக உடல் எடை சற்று கூடி, பார்ப்பதற்கு வயதான தோற்றத்திலும், சற்று குண்டாகவும் காட்சியளித்தார். மேலும், இவரது நடிப்பில் வெளியான சமீபத்திய படங்களும் சரிவர ஓடவில்லை.
இந்நிலையில் தற்போது தனது உடல் எடையை குறைத்து படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் தயாராகிய சங்கத்தமிழன் படம் இன்று திரைக்கு வந்துள்ளது. இந்த படம் கண்டிப்பாக விஜய் சேதுபதிக்கு வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நேற்று தனது திருமண நாளை தனது மனைவியுடன் கோலாகலமாக கொண்டாடியுள்ளார். அப்போது அவர் எடுத்து கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது.