வாவ்!! நம்ம விஜய் டிவி கண்ணம்மாவா இது?? என்னா ஒரு ஆட்டம்!! வைரல் வீடியோ..



Vijay TV Bharathi Kannamma roshini viral dance

பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினியின் லேட்டஸ்ட் வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாரதி கண்ணம்மா தொடர் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. TRP யில் பட்டையை கிளப்பிவரும் இந்த தொடரின் பெரிய வெற்றிக்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்று தொடரின் நாயகி கண்ணம்மா என்கிற காதாபாத்திரமும் ஒன்று.

vijay tv

இத்தொடரில் கண்ணம்மா என்கிற கதாபாத்திரத்தில் நடித்துவருபவர் ரோஷினி. மாடலிங் துறையை சேர்ந்த இவருக்கு இதுதான் முதல் சீரியல். தனது அழகான நடிப்பினாலும், திறமையாலும் பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிவைத்துள்ளார் ரோஷினி.

அம்மணி சீரியலில் ஒரு பக்கம் பிஸியாக இருந்தாலும்  சமூக வலைத்தளங்களிலும் ஆக்ட்டிவ் ஆக உள்ளார். அந்த வகையில் அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.