மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திருமணம் முடிந்த கையோடு நந்தினி மைனா என்ன செய்துள்ளார் பாருங்கள்! வீடியோ இதோ!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடரில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை நந்தினி மைனா. சரவணன் மீனாட்சி சீரியலில் நாயகியின் தோழியாக மிகவும் காமெடியான கதாபாத்திரத்தில் மைனாவாக நடித்திருந்தார்.
மைனா கதாபாத்திரம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து சின்னத்திரையில் பிரபலமாகி பின்னர் வெள்ளி திரை பக்கம் சென்றார் நந்தினி. சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவருக்கு திருமணம் முடிந்த நிலையில் கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் நந்தினியின் கணவர் தற்கொலை செய்துகொண்டார். இதனை அடுத்து பிரபல சீரியல் நடிகர் ஒருவரை மைனா காதலித்துவருவதாக கூறப்பட்டது.
தற்போது இவர்கள் காதல் உறுதியாகி சமீபத்தில் திருமணமும் முடிந்தது. திருமணம் முடிந்த கையோடு தனது கணவருடன் சேர்ந்து டிக் டாக் வீடியோ செய்துள்ளார் மைனா. அதில் ஆடி கார் வேண்டும் என மாப்பிள்ளை அடம்பிடிப்பது, மன்னன் பட மியூஸிக்கிற்கு மரத்தடியில் அமர்ந்து இருவரும் மாறி மாறி முத்தம் கொடுத்து கொள்வதுமாய் உள்ளனர்.
அதுமட்டும் இல்லாமல் நம்ம வீட்டுப்பிள்ளை படத்தில் இடம்பெற்ற காந்த கண்ணழகி பாடலுக்கு அனைவருடனும் சேர்ந்து நடனமாடுவதாகவும் உள்ளது. எல்லாம் சரி, எங்கப்பா அந்த ஜிம் மாஸ்டர்? அவர் ஆத்மா சாந்தி அடையட்டும், அடுத்த கல்யாணம் எப்போ? வருசத்துக்கு ஒரு கல்யாணமா? என நெட்டிசன்ஸ் அந்த வீடியோவிற்கு கமெண்ட் செய்துவருகின்றனர்.