இரண்டாவது திருமணம் செய்யப்போகும் விஜய் டிவி பிரபல நடிகை மைனா! மாப்பிளை யார் தெரியுமா?



Vijay tv maina second marriage

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடரில் மைனா என்ற கதாபாத்திரம் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சின்னத்திரை நடிகை நந்தினி. சரவணன் மீனாட்சி தொடர் இவரை சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கியது. அதன்பின்னர் ரோமியோ ஜூலியட் போன்ற படங்களில் சிறு சிறு வேடத்தில் நடித்துள்ளார்.

தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அரண்மனை கிளி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தும் வருகிறார். இந்நிலையில் காதலித்து திருமணம் செய்துகொண்ட நந்தினி குடும்ப சண்டையின் காரணமாக அவரது கணவர் கடந்த வருடம் தற்கொலை செய்துகொண்டார்.

vijay tv

இந்நிலையில் நந்தினி சன் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் நாயகி சீரியல் நடிகர் ஒருவரை காதலிக்கிறார் என்று பேட்டியில் கூறியிருக்கிறார். மேலும் அவர் கூறுகையில் விமர்சனம் செய்பவர்களால் என்னை புரிந்து கொள்ள முடியாது. ஒவ்வொருதருக்கும் தனித்தனியாக புரிய வைக்க எனக்கு அவசியமும் கிடையாது. நான் நானாக எப்போதும் இருப்பேன் என்று கூறியுள்ளார்.