மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வாவ்... செம மாஸ்... ரஞ்சிதமே ரஞ்சிதமே...விஜயின் வாரிசு பாடல் வெளியானது... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்...
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவருக்கு என்று தமிழகம் மட்டுமின்றி உலகமெங்கும் ரசிகர் பட்டாளம் உள்ளது. இவர் நடிப்பில் இறுதியில் வெளியான பீஸ்ட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
விஜய் படம் என்றாலே தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலகமெங்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உண்டாகும். இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் ரசிகர்களை மகிழ்விக்க தெலுங்கு இயக்குனரான வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வெளியாக உள்ள திரைப்படம் வாரிசு.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் தற்போது இப்படத்தின் முதல் பாடலாக ரஞ்சிதமே ரஞ்சிதமே என்ற பாடல் வெளியாகி ரசிகர்களை அலற விட்டுள்ளது. மேலும் ரசிகர்கள் இடையே வாரிசு படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.