ஆபீஸ் பக்கம் திடீர் விசிட் அடித்த விஜய்! சுற்றி வளைத்த ரசிகர்கள்! புதிய லுக்கில் தீயாய் பரவும் புகைப்படம்!



vijay-visit-to-his-panaiyur-office

தமிழ் சினிமாவில் ஏராளமான ஹிட் திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக, உச்ச நட்சத்திரமாக கொடிகட்டி பறப்பவர் நடிகர் விஜய். இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. மேலும் இவரது திரைப்படங்கள் வெளியாகும் நாட்கள், பிறந்த நாள் போன்றவற்றை ரசிகர்கள் திருவிழாக்களை போல கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
 
இந்நிலையில் நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்த மாஸ்டர் திரைப்படம் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு பின் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வசூல் சாதனையும் படைத்தது. அதனைத் தொடர்ந்து விஜய் அடுத்ததாக நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்க உள்ளார்.

vijay

சென்னை பனையூரில் விஜய் மக்கள் இயக்க அலுவலகம் அமைந்துள்ளது. இதன் கூட்டம் ஒவ்வொரு வாரமும் நடைபெறும் இந்நிலையில் இன்றும் கூட்டம் நடைபெறவிருந்த நிலையில் பல மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகளும்,ரசிகர்களும் வருகை தந்துள்ளனர் .

இந்நிலையில் அங்கு திடீரென விஜய் வருகை தந்த நிலையில் அவரைக் கண்டு இன்ப அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் அவரது காரை சூழ்ந்து கொண்டனர். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது. அந்த புகைப்படத்தில் விஜய் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இருந்துள்ளார்.

vijay