மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா... கமலின் விக்ரம் படம் இதுவரை உலகம் முழுவதும் இத்தனை கோடி வசூலா... கொண்டாட்டத்தில் படக்குழு!!
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் கமல் நடிப்பில் வெளிவந்து தற்போது வசூலை வாரி இறைத்து திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் விக்ரம்.இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா, நரேன், காளிதாஸ் ஜெயராம் என பல முன்னணி பிரபலங்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். நடிகர் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து மாஸ் காட்டி வருகிறது.
இந்நிலையில் இந்த வருடம் தமிழகத்தில் வெளியான படங்களில் நல்ல வசூலை ஈட்டிய படமாக கமல்ஹாசனின் விக்ரம் படம் அமைந்துள்ளது. உலகம் முழுவதும் இதுவரை விக்ரம் படம் 360 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ளதாம்.