நெட்பிளிக்ஸில் 2025ம் ஆண்டு வெளியாகவுள்ள தமிழ் படங்கள் என்னென்ன? வெளியானது அசத்தல் லிஸ்ட்.!
" பொறுக்கிகளின் காலில் விழுபவர் ரஜினிகாந்த்" மன்சூர் அலிகான் காட்டம்.!
90களில் ஏராளமான தமிழ் திரைப்படங்களில் வில்லனாக நடித்து மிரட்டியவர் நடிகர் மன்சூர் அலிகான். இப்போது காமெடி கேரக்டர்களில் நடித்து வருகிறார்.
நேற்று சந்தானம் நடித்துள்ள "கிக்" திரைப்படத்தில் இசை வெளியீட்டுவிழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நடிகர் மன்சூர் அலிகான், செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது, "ரஜினி சினிமாவில் தான் இடதுசாரி. நிஜத்தில் இல்லை. பொறுக்கிகளை நேரில் சந்தித்து காலில் விழும் இவர் இனியும் தமிழக மக்களை ஏமாற்ற முடியாது.
எப்போதும் MGR மட்டும் தான் ஒரே சூப்பர்ஸ்டார்" என்றும் கூறினார். முன்னதாக "வாரிசு" இசை வெளியீட்டுவிழாவில் ஆரம்பித்த "சூப்பர்ஸ்டார்" பட்டம் குறித்த சர்ச்சை, இன்னும் தொடர்ந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.