மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடக்கடவுளே.. வில்லன் நடிகருக்கு உணவில் ஸ்லோ பாய்சன் கொடுத்து கொலை முயற்சி..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!
பாடகர், எழுத்தாளர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் சக்கரவர்த்தி. இவர் தெலுங்கு துறையில் பல படங்களில் நடித்திருந்தாலும், தமிழில் வெளியாகிய சர்வம், அரிமா நம்பி, சிகாமணி போன்ற படத்தில் நடித்து பிரபலமானார்.
இவர் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து தன்னை திரையுலகில் அறிமுகப்படுத்தி கொண்டார். இவருக்கு சமீபகாலமாகவே உடல்நலக்குறைவு இருந்த நிலையில், மருத்துவர்கள் பரிசோதித்து எந்த பிரச்சினையும் இல்லை என்று கூறியுள்ளனர்.
எவ்வித கேட்ட பழக்கமும் இல்லாத நிலையில் தனக்கு எப்படி உடல்நிலை சரியில்லாமல் போகிறது என்று யோசனையிலேயே இருந்துள்ளார். இந்த நிலையில் தனக்கு தெரிந்த மருத்துவ நண்பர் மூலமாக உடலை பரிசோதனை செய்தபோது, உடலில் ஸ்லோ பாய்சன் விஷத்தை கண்டறிந்துள்ளனர்.
இதனை ஆராய்ந்து பார்த்ததில் நடிகருக்கு நெருக்கமான ஒருவர் உடனிருந்து மெல்ல கொள்ளும் விஷத்தை உணவில் கலந்து சாப்பிட கொடுத்த சம்பவம் தெரிய வந்துள்ளது. இதனால் அதிர்ந்த நடிகர் காவல்துறையில் புகாரளிக்கவே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.