அடேங்கப்பா.. நடிகர் மாதவன் வாங்கியுள்ள காஸ்ட்லி சொகுசு படகு.! விலையை கேட்டு வாயை பிளந்த ரசிகர்கள்!!
பல சோதனைகளால், கஷ்டகாலத்தில் இருக்கும் விஷாலை கவலையில் மூழ்கடித்த மரணம்! பிரபலங்கள் இரங்கல் !
பொதுக்குழுவில் ஆலோசிக்காமல் நடிகர் விஷால் தன்னிச்சையாக முடிவெடுப்பதாக தயாரிப்பாளர்கள் சங்கத்தை சேர்ந்த ஒரு பிரிவினர், தயாரிப்பாளர் சங்கத்தின் அலுவலகத்திற்கு பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் எதிர்தரப்பினர் போட்ட பூட்டை உடைக்க முயன்ற நடிகர் விஷால் கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்பட்டார். இதனை எதிர்த்து அவர் வழக்கு தொடர தீர்ப்பும் அவருக்கு சாதகமாகவே வந்துள்ளது.
இந்நிலையில் பல சோதனைகளை கடந்து வந்த விஷாலுக்கு எழுத்தாளர் பிரபஞ்சனின் மரணம் பெரும் கவலை ஏற்படுத்தியுள்ளது. இலக்கியத்தில் பணியாற்றிய எழுத்தாளர் பிரபஞ்சன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்றுவந்த நிலையில், புதுச்சேரியில் காலமாகியுள்ளார்.
இதற்கு வருத்தம் தெரிவித்து நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
— Vishal (@VishalKOfficial) 21 December 2018
மேலும் பல திரைப்படபிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்களும் எழுத்தாளர் பிரபஞ்சனின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.