மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்னது.. நடிகர் விஷாலோட முதல் படம் இதுவா! சிறுவயதில் எப்படியிருக்கார் பார்த்தீர்களா!! வைரலாகும் புகைப்படம்!
தமிழ் சினிமாவில் செல்லமே என்ற படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகர் விஷால். அதனை தொடர்ந்து அவர் ஏராளமான ஹிட் திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக உள்ளார். பிரபல தயாரிப்பாளர் ஜி.கே ரெட்டியின் இரண்டாவது மகனான விஷால் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் செயலாளராகவும், திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் இருந்து வந்தார்.
இந்த நிலையில் விஷால் தற்போது சக்ரா என்ற படத்தை தயாரித்து, நடித்துள்ளார். அப்படம் வெளியாவாதில் சிக்கல் ஏற்பட்டு இடைக்கால தடை விதிக்கப்பட்ட நிலையில் பின்னர் அது நீக்கப்பட்டு ஒருவழியாக படம் திரைக்கு வந்துள்ளது. நடிகர் விஷால் நடித்த முதல் திரைப்படம் செல்லமே என ரசிகர்கள் பலரும் எண்ணி கொண்டிருக்கின்றனர்.
ஆனால் அதற்கு முன்னரே அவர் 1989ல் நடிகர் பாண்டியராஜன் நடிப்பில் வெளிவந்த ஜாடிக்கேத்த மூடி என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளாராம். விஷாலின் தந்தை ஜி.கே ரெட்டி தயாரித்த இப்படத்தில் ஒரு பாடலில் மட்டும் நடிகர் விஷால் பாண்டியராஜனுடன் சில நொடிகள் நடனமாடியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.