மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சம்பவம் நடந்த நாள்!! தொகுப்பாளினி மணிமேகலை முதன்முதலாக வெளியிட்ட வீடியோ! குவியும் வாழ்த்துக்கள்!
பிரபல மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்து தனது கலகலப்பான பேச்சால் ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றவர் மணிமேகலை. இவர் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர்.
இந்நிலையில் விஜே மணிமேகலை, நடன இயக்குனரான காதர் ஹுசைன் என்பவரை காதலித்து வந்த நிலையில், இரு குடும்பத்தாரும் சம்மதிக்காததால் அவர்களை எதிர்த்து கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் ஆறாம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.அதனைத் தொடர்ந்து அவர்கள் சிறந்த காதல் ஜோடியாக விளங்கி வருகின்றனர்.
இந்நிலையில் வாழ்வில் பல கஷ்டங்களையும், சவால்களையும் சந்தித்த இந்த தம்பதியினர் சமீபத்தில் பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார் அதனைத் தொடர்ந்து மணிமேகலை சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில் மணிமேகலை மற்றும் ஹுசைன் தம்பதியினர் இன்று தங்களது இரண்டாவது ஆண்டு திருமண நாளை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் மணிமேகலை முதன்முதலாக தனது திருமண வீடியோவை வெளியிட்டு, சம்பவம் நடந்த நாள். இந்த ஜென்மத்துல சிறந்த நாள் என தனது கணவரை பாராட்டி பதிவுகளை வெளியிட்டு உள்ளார்.