மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கவர்ச்சிகன்னி மும்தாஜ் சினிமாவில் நடிக்காமல் போனதற்கு காரணம் இதுதானா.? உண்மையை உடைத்த பிரபலம்.!
தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி கவர்ச்சி கன்னியாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் மும்தாஜ். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் கதாநாயகியாகவும், கவர்ச்சி கதாபாத்திரங்களிலும், நடித்துள்ளார்.
முதன் முதலில் தமிழில் 'மோனிஷா என் மோனலிசா' எனும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார். இதனையடுத்து தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்த மும்தாஜ் திடீரென்று கவர்ச்சியின் பக்கம் திரும்ப தொடர்ந்து கவர்ச்சி கதாபாத்திரங்களாக இவருக்கு வந்தது.
குறிப்பாக விஜய் நடிப்பில் வெளியான 'குஷி' திரைப்படத்தில் கவர்ச்சி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இவ்வாறு தொடர்ந்து நடித்து கொண்டிருந்த மும்தாஜ் திடீரென்று சினிமாவிலிருந்து விலகிவிட்டார். இதன் காரணத்தை பற்றி பிரபல சர்ச்சையான பத்திரிக்கையாளர் பயில்வான் பேசியிருக்கிறார்.
அவர் கூறியதாவது, "மும்தாஜ் தொடர்ந்து கவர்ச்சியாக படங்களில் நடித்து அதிகமாக பணம் சேர்த்து பின்பு அவற்றை இழந்துவிட்டார். இதன்பின் தொழிலதிபரை திருமணம் செய்து செட்டிலாகிவிட்டார். கணவரின் கட்டளையால் தற்போது திரைப்படங்கள் நடிக்காமல் இருக்கிறார்" என்று பேசியிருக்கிறார்.