மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தங்கை குறித்து உருக்கமாக பேசிய விஜய் சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்.!
தமிழ் திரை துறையை பொறுத்தவரையில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் விஜய். இவருடைய ரசிகர்கள் இவரை அன்போடு தளபதி என்று அழைத்து வருகிறார்கள். இவருடைய நடிப்பில் 2023 ஆம் ஆண்டு தொடக்கத்தில் வெளியான வாரிசு திரைப்படமும், இந்த வருடம் இறுதியில் சென்ற அக்டோபர் மாதம் வெளியான லியோ திரைப்படமும் மிகப்பெரிய சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக லியோ திரைப்படம் 598 கோடி ரூபாய் வரையில் வசூல் செய்ததாக தெரிகிறது. இதுவரையில் வெளியான எந்த ஒரு விஜய் திரைப்படமும் இந்தளவுக்கு வசூல் சாதனை படைத்ததில்லை என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தான், நடிகர் விஜய்க்கு வித்யா என்ற தங்கை ஒருவர் இருந்துள்ளார். ஆனால் துரதிஷ்டவசமாக அவருக்கு 2 வயது இருந்த போதே உடல் நலக்குறை காரணமாக உயிரிழந்து போனார்.
இந்த சூழ்நிலையில்தான் மறைந்த தன்னுடைய தங்கை தொடர்பாக நடிகர் விஜய் உருக்கமாக பேசியுள்ள வீடியோ ஒன்று இணையதளத்தில் இன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் நடிகர் விஜய்க்கு யாரோ ஒருவர் ஒரு பரிசை கொடுத்திருக்கிறார். அந்த பரிசில், விஜயும், அவருடைய தங்கை வித்யாவும் ஒன்றாக இருக்கும் ஒரு ஓவியம் வரையப்பட்டிருக்கிறது. அந்த ஓவியத்தை பார்த்தவுடன் தன்னுடைய தங்கை தொடர்பாக அவர் உருக்கமாக பேசியிருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதை கண்ட விஜயின் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.