மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பெயரை இர்ஃபான் அகமதாக மாற்றிய நடிகர் விஷ்ணு விஷால்.! என்ன காரணம் தெரியுமா.?
தமிழ் சினிமாவில் "வெண்ணிலா கபடிகுழு" என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷால். இந்த படத்தை தொடர்ந்து அவர் ஏராளமான சூப்பர்ஹிட் படங்களில் நடித்துள்ளார். மேலும் அவர் நடித்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் அடித்தது. தற்போது எஃப்.ஐ.ஆர் படத்தைத் தயாரித்து, நடித்திருக்கிறார் விஷ்ணு விஷால்.
மனு ஆனந்த் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகை மஞ்சிமா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இயக்குனர் கவுதம் மேனன், நடிகை ரைசா வில்சன், ரேபா மோனிகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படம் நேற்று ரிலீஸ் ஆகியுள்ளதை அடுத்து விஷ்ணு விஷால் டிவிட்டரில் தனது பெயரை இர்ஃபான் அகமது என மாற்றியுள்ளார். படத்தில் இர்ஃபான் அகமது என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள விஷ்ணு விஷால், அந்த பெயரையே தனது யூசர் நேமாக வைத்துள்ளார். படத்தின் ப்ரமோஷனுக்காக விஷ்ணு விஷால் ட்விட்டரில் பெயரை மாற்றியுள்ளதாக தெரிகிறது.