கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
"தீபாவளிக்கு வீட்டுக்கு வாயா மஜாவா இருக்கலாம்.." ஓனருடன் கள்ளக்காதல்.!! கணவன் கொலை.!!
சென்னையில் கள்ளக்காதல் விவகாரத்தில் கணவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த கொலை வழக்கில் நாடகமாடிய மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலன் ஆகியோரை கைது செய்துள்ள காவல் துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
ராஜசேகர் மரணம்
சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் லாரி ஓட்டுனராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி சித்ரா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த தீபாவளி தினத்தன்று காலை முதலே மது போதையில் இருந்த இவர் மாலை வீட்டிற்கு திரும்பிய நிலையில் உறங்கச் சென்று இருக்கிறார். இரவு நீண்ட நேரமாகியும் எழும்பாததால் சந்தேகமடைந்த மனைவி இவரை எழுப்பி இருக்கிறார். அப்போதும் ராஜசேகர் எழும்பவில்லை. இதனைத் தொடர்ந்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் ராஜசேகர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சந்தேக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் வெளிவந்த உண்மை
ராஜசேகரின் கழுத்துப் பகுதியில் காயம் இருந்திருக்கிறது. மேலும் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டதாக தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவரது மனைவி சித்ரா மீது சந்தேகமடைந்த காவல்துறையினர் அவரிடம் தங்கள் பாணியில் தீவிரமாக விசாரித்தனர். அப்போது தனது கள்ளக்காதலன் தனசேகருடன் சேர்ந்து ராஜசேகரை கழுத்தை நெரித்து கொலை செய்ததை சித்ரா ஒப்புக்கொண்டார். மேலும் கள்ளக்காதல் ஜோடி இருவரும் காவல்துறையிடம் வாக்கு மூலமும் அளித்துள்ளனர்.
இதையும் படிங்க: "துரோகத்திற்கு தண்டனை மரணம்.." வக்கீல் எரித்து கொலை.!! சரணடைந்த குற்றவாளி.!!
கள்ளக்காதலுக்கு தடையாக இருந்ததால் கொலை
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை நடத்திய விசாரணையில் கள்ளக்காதலுக்கு தடையாக இருந்ததால் ராஜசேகர் கொலை செய்யப்பட்டது அம்பலமாகி இருக்கிறது. ராஜசேகரின் மனைவி சித்ராவிற்கும் அவரது லாரியின் உரிமையாளரான தனசேகர் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்திருக்கிறது. இந்நிலையில் தீபாவளி தினத்தன்று சித்ராவை சந்திக்க தனசேகர் வீட்டிற்கு வந்திருக்கிறார். இந்நிலையில் மது போதையில் வீட்டிற்கு வந்த ராஜசேகர் தனது ஓனர், மனைவியுடன் நெருக்கமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இது தொடர்பாக தனது மனைவி மற்றும் தனசேகரிடம் சண்டையிட்டு இருக்கிறார். இதனைத் தொடர்ந்து சித்ரா மற்றும் தனசேகர் ஆகியோர் ராஜசேகரை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு நாடகமாடி இருக்கின்றனர். காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையின் பயனாக இந்த உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து தனசேகர் மற்றும் சித்ராவை கைது செய்த காவல்துறையினர் சிறையிலடைத்தனர்.
இதையும் படிங்க: #Breaking: சென்னையில் போதைப்பொருள் சாம்ராஜ்யம்.. ரியல் "கோலமாவு கோகிலா" கைது., திரைப்படத்தை மிஞ்சும் உண்மை உள்ளே.!