மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அச்சோ.. ஏன்? என்னாச்சு? கதறி கதறி அழுத யாஷிகா! பதறிப்போன ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி, துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற படங்களில் தாறுமாறான கவர்ச்சியில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். பின்னர் அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2வில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி மக்களிடையே பெருமளவில் பிரபலமானார்.
அதனைத் தொடர்ந்து சில படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வந்த யாஷிகா சில மாதங்களுக்கு முன்பு பயங்கர விபத்தில் சிக்கினார். இதில் அவரது உயிர்தோழி வள்ளிஷெட்டி பவானி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் பலத்த காயமடைந்த யாஷிகா சிகிச்சை பெற்று தற்போது குணமடைந்து மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியுள்ளார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது வித்தியாசமான போட்டோஷூட் நடத்தி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவார். மேலும் ரீல்ஸ் வீடியோவையும் வெளியிடுவார். இந்நிலையில் தற்போது யாஷிகா தனது நண்பர்களுடன் கதறி அழுவது போன்ற வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் ஏன்? என்னாச்சு? எதுக்கு இப்படி கதறி அழுகிறீர்கள். உங்கள் நண்பர்களும் எதற்காக அழுகிறார்கள் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.