வெளியான யாசிகாவின் அடுத்த படத்தின் ஷாக் புகைப்படங்கள்!



Yashika zombie movie stills

யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் 'ஜாம்பி'. இந்த படத்தில் கதாநாயகியாக பிக்பாஸ் புகழ் யாசிகா ஆனந்த் நடிக்கிறார். இந்த படத்தின் சில புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. 

பிக்பாஸ் புகழ் யாசிகா மற்றும் காமெடி நடிகர் யோகி பாபு இணைந்து நடிக்கும் ஹாரர் திரைப்படம் 'ஜாம்பி'. இந்த படத்தினை புவன் நலன் இயக்குகிறார். யோகிபாபு, யாஷிகா ஆனந்த், கோபி, சுதாகர், டி.எம்.கார்த்திக், மனோபாலா, அன்புதாசன், பிஜிலி ரமேஷ், ராமர், ‘லொள்ளு சபா’ மனோகர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடிக்கின்றனர். 

Yashika anandh

இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து இப்போது இரண்டாம்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ‘எஸ் 3 பிக்சர்ஸ்’ சார்பில் வசந்த் மாணிக்கம் மற்றும் முத்துக்குமார் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு பிரேம்ஜி இசை அமைக்கிறார். 

Yashika anandh

சென்னையில் நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. படக்குழுவினருடன் யாசிகா ஆனந்த் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 

Yashika anandh