மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஒரே படத்தில் இவ்வளவு காமெடி நடிகர்களா? குலுங்க குலுங்க சிரிக்கவைக்க வருகிறது!.
காமெடி நடிகர் யோகி பாபு பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்துடன் இணைந்து நடிக்க இருக்கிறார்.
‘மோ’ என்ற படம் மூலம் பிரபலம் அடைந்தவர் இயக்குனர் புவன் நல்லான். காமெடி கதையுடன் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
இவர் அடுத்ததாக ‘ஜாம்பி’ என்ற புதிய படத்தை இயக்கவுள்ளார். ‘எஸ்3′ பிக்சரஸ் சார்பில் வசந்த் மகாலிங்கம், வி.முத்துக்குமார் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்கள்.
இப்படம் குறித்து இயக்குனர் புவன் நல்லான் கூறுகையில்,
கதாநாயகன், நாயகி என்றில்லாமல் இந்த படத்தில் கதை தான் நாயகன், நாயகி, வில்லன் என கூறியுள்ளார்.
இந்த படத்தில் யோகி பாபு, பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த் இருவரும் பரபரப்பான கேரக்டர்களில் நடிக்கிறார்கள். யூடியூப் புகழ் கோபி சுதாகர் இப்படம் மூலம் அறிமுகமாகிறார்.
தற்போது காமெடியில் கலக்கும் ராமர், லொள்ளு சபா மனோகர், “மியூசிக்கலி” புகழ் சித்ரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். அவரவர் பாணியில் வெவ்வேறு தளங்களில் காமெடிகளில் கலக்கி வரும் இவர்களை இப்படம் மூலம் இணைத்ததில் பெருமை கொள்கிறேன் என கூறுகிறார் இயக்குனர். மேலும் இந்த படத்தினை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.