மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அவமானப்படுத்தப்பட்ட யோகிபாபு.?! தொலைக்காட்சி பேட்டியில், போட்டுடைத்த நடிகர்.!
யோகி தமிழில் பல படங்களில் நடித்து தவிர்க்க முடியாத காமெடி நட்சத்திரமாக மாறியுள்ளார். யோகி பாபு பல முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்திருக்கிறார். இவர் நடித்த பீஸ்ட், கோலமாவு கோகிலா, லவ் டுடே, கோமாளி போன்ற பல படங்களில் இவரது கதாபாத்திரம் பலராலும் பேசப்பட்டு வந்தது.
மேலும், யோகி பாபு ஒரு காலத்தில் வாய்ப்பைத் தேடி அலைந்து சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து விடாமுயற்சியுடன் இந்த நிலைக்கு வந்திருக்கிறார். தமிழக அரசு இவருக்கு கலைமாமணி விருதை வழங்கி கௌரவித்துள்ளது. இவர் 300 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல தொலைக்காட்சி ஒன்று இவரை பேட்டி எடுத்தபோது பல சுவாரசியமான தகவல்களை அளித்துள்ளார் யோகி பாபு. அந்தப் பேட்டியில், "நான் ஒரு நகைச்சுவை நடிகர் என்பது வரை சரி. எனக்கு எதுக்கு ஆக்சன்.? காமெடி பண்றவனுக்கு எதுக்கு சிக்ஸ் பேக்? எனக்கு என்ன வருமோ அதை பண்ணிட்டு போயிட்டே இருக்கணும். எனக்கு சோறு போட்டது காமெடி மட்டும்தான்." என்று அவர் கூறியிருக்கிறார்.
அதன் பின்பு, "வாய்ப்பு தேடி பல இடங்களுக்கு சென்றபோது அவமானப்பட்டேன்" என்றும், "இப்போது அவமானப்படுத்தப்பட்ட இடத்தில் இருந்து என்னை நடிக்க அழைக்கிறார்கள்" என்றும் கூறினார். "விடாமுயற்சியும், கடின உழைப்பும் இருந்தால் வாழ்க்கையில் முன்னேறி விடலாம் என்பதற்கு நானும் ஒரு எடுத்துக்காட்டு .
"யாரைப் பார்த்தும் பொறாமை படாதே உன் வேலையை நீ பாரு" என்பதே எனது தாரக மந்திரம்." என்று யோகி பாபு பிரபல தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்திருந்தார்.