மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆங்கிலோ இந்தியன் ஆண்ட்டி கெட்டப்பில் பட்டையை கிளப்பும் யோகிபாபு.!
பிரபல நடிகர் யோகி பாபு சில படங்களில் ஹீரோவாகவும், நிறைய படங்களில் நகைச்சுவை நாயகனாகவும் நடித்து வருகின்றார். சமீப காலமாக அவர் நிறைய கெட்டப்புகளை போட்டு நடித்து வருவதால் அவருக்கு நிறைய ரசிகர் கூட்டம் ஏற்பட்டுள்ளது.
அந்த வரிசையில் தற்போது அவர் ஆங்கிலோ இந்தியன் பெண் வேடம் ஒன்றை அவதரித்துள்ளார். மிஸ் மேகி என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ஹீரோவாக மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஹீரோயினாக ஆத்மிகா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் அப்பட குழுவினர் யோகி பாபு ஆங்கிலோ இந்தியனாக இருக்கும் பெண் வேட புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருக்கின்றனர்.
இதை பார்த்த ரசிகர்கள் அதனை வெகுவாக பகிர்ந்து யோகி பாபுவை பாராட்டி வருகின்றனர். இந்த படம் 2023 இறுதியில் வெளியாகும் என்று பட குழு தெரிவித்துள்ளது. படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கும் விதமாக யோகிபாபுவின் ஆங்கிலோ இந்தியன் கெட்டப் இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.