மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விஷாலுடன் படப்பிடிப்பிற்கு செல்லும் போது காரை நிறுத்தி யோகி பாபு செய்த செயல்.. ரசிகர்கள் அதிர்ச்சி.!
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் விஷால். இவர் தமிழில் பல ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். சில வருடங்களாக இவரது திரைப்படங்கள் தொடர் தோல்வியை அடைந்து வந்தன.
இந்நிலையில் சமீபத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் கதாநாயகனாக, எஸ் ஜே சூர்யா வில்லனாக நடித்த திரைப்படம் மார்க் ஆண்டனி. இப்படம் வெளியாகி மிகப்பெரும் வெற்றி அடைந்து ரசிகர்களின் பாராட்டை பெற்றது.
பல வருடங்களுக்கு பிறகு விஷாலின் வெற்றி திரைப்படம் என்பதால் விஷாலின் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருந்து வருகின்றனர். தற்போது விஷால், ஹரி இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடந்து வருகின்றன.
மேலும் படத்தில் யோகி பாபு நடித்து இருக்கிறார். இதன்படி படத்தின் படப்பிடிப்புக்காக விஷாலும், யோகிபாபு சென்று கொண்டிருந்தபோது காரை திடீரென நிறுத்தச் சொல்லி அங்கிருந்த கடையில் முருகன் சிலை ஒன்றை வாங்கி விஷாலுக்கு பரிசளித்துள்ளார். இதனை விஷால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு நன்றி கூறியிருக்கிறார். இச்செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.