மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடஅட.. கள்ளமில்லா குழந்தை சிரிப்பு! விஜயகாந்தை சந்தித்த பிரபல காமெடி நடிகர்.! ரசிகர்களை மகிழ்ச்சியில் மூழ்கடித்த வீடியோ!!
தமிழ் சினிமாவில் நாட்டுப்பற்று மற்றும் சமூக நலம் குறித்து வெளிவந்த பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வந்தவர் விஜயகாந்த். லட்சகணக்கான ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றிருந்த அவரை ரசிகர்கள் பாசமாக கேப்டன் என அழைத்து வந்தனர். இந்நிலையில் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த அவர் திடீரென அரசியலில் ஈடுபாடு காட்டினார். நாளடைவில் சினிமாவை விட்டுவிட்டு முழு நேரமும் அரசியலில் கவனத்தை செலுத்தி வந்தார்.
இந்த நிலையிலேயே அவரது உடல்நிலை சரியில்லாமல் சென்று கடந்த சில ஆண்டுகளாகவே சிகிச்சை பெற்று வருகிறார். அதனை தொடர்ந்து வீட்டிலேயே ஓய்வு பெற்று வரும் அவர் பழைய கேப்டனாக கம்பீரமாக எப்போது திரும்பி வருவார் என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். இதற்கிடையில் திரைப்பிரபலங்கள் பலரும் விஜயகாந்த் வீட்டிற்கு சென்று அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது காமெடி நடிகர் யோகி பாபு நடிகர் விஜயகாந்தை சந்தித்துள்ளார். அந்த வீடியோவை அவர் தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் யோகி பாபு ஏதோ பேச அதற்கு கள்ளம் கபடமற்ற குழந்தை போல விஜயகாந்த் அழகாக சிரித்துள்ளார். இந்த வீடியோவை கண்ட ரசிகர்கள், இதனை பகிர்ந்ததற்கு நன்றி. இப்படி இவரை பார்த்து எவ்வளவு நாளாச்சு என மகிழ்ச்சியுடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.
— Yogi Babu (@iYogiBabu) November 2, 2022