மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ப்பா.. வேற லெவல்! ஜிம்மில் மூச்சு வாங்க வெறித்தனமாக ஒர்க்அவுட் செய்யும் யோகிபாபு.! இணையத்தில் ட்ரெண்டாகும் வீடியோ!!
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் நடிகர் யோகிபாபு. அவர் நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி பல படங்களில் முன்னணி கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். தற்போது இவரது கைவசம் எக்கச்சக்கமான திரைப்படங்கள் உள்ளன.
நடிகர் யோகிபாபு சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த மாவீரன், ரஜினியுடன் நடித்த ஜெயிலர், ஹிந்தியில் நடிகர் ஷாருக்கான் உடன் நடித்துள்ள ஜவான் ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ்க்கு தயாராக உள்ளது. மேலும் யோகிபாபு கைவசம் அரண்மனை 4, பூச்சாண்டி, வெள்ளை உலகம், மெடிக்கல் மிராக்கிள், பூமர் அங்கிள் என ஏராளமான திரைப்படங்கள் கைவசம் உள்ளது. அவர் எம்.எஸ் தோனி தயாரித்துள்ள முதல் தமிழ் படமான லெட்ஸ் கெட் மேரிடு திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும் அவர் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் யோகி பாபு தனது உடல் எடையை குறைக்க தயாராகியுள்ளார். அவர் ஜிம்மில் கடுமையாக வொர்க் அவுட் செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதனை கண்ட ரசிகர்கள் யோகிபாபு சிக்ஸ் பேக் வைக்க தயாராகிவிட்டார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.