மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அச்சு அசல் நடிகர் சிவகார்த்திகேயன் போலவே இருக்கும் இளம் நடிகர்... வைரலாகும் புகைப்படம்!!
சின்னத்திரையில் மிமிக்ரி மற்றும் தனது நகைச்சுவை திறமையால் அனைவரையும் கவர்ந்து பின்னர் விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் சிவகார்த்திகேயன். இவர் தனது முயற்சியால் வெள்ளித்திரையில் கால்பதித்து ஏராளமான சூப்பர்ஹிட், மாஸ் திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகர்களுள் ஒருவராக கொடிகட்டி பறக்கிறார்.
இவருக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்த வருடம் இவர் நடிப்பில் வெளியான மாவீரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. தற்போது இவர் நடிப்பில் அயலான் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் போலவே இருக்கும் இளம் நடிகர் ஒருவரின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. நடிகர் அசோக் செல்வன் நடித்துள்ள சபாநாயகன் திரைப்படத்தில் அவரின் நண்பராக நடித்த இளம் நடிகர் ஒருவர் பார்ப்பதற்கு அப்படியே சிவகார்த்திகேயன் போலவே இருக்கிறார்.