மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உடல் எடையை குறைக்க மேற்கொண்ட டயட்! பரிதாபமாக உயிரிழந்த பிரபல இளம் நடிகை!
இன்றைய காலகட்டத்தில் ஆண்கள், பெண்கள் என அனைவரும் உடல் எடையை குறைக்க வேண்டும், அழகை மேம்படுத்த வேண்டும் என பல்வேறு வித்தியாசமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சினிமா துறையில் இருப்பவர்கள் என்றால் சொல்லவே தேவையில்லை.
அவர்கள் படத்தின் கதைக்கேற்ப அடுத்தடுத்த திரைப்படங்களில் தங்களது உடலை ஏற்றவும், இறக்கவும் என பலவிதமான முயற்சிகளை மேற்கொள்வர். இவ்வாறு தனது உடல் எடையை குறைக்க மேற்கொண்ட டயட்டால் பிரபல நடிகை ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹிந்தி மற்றும் பெங்காலியில் ஏராளமான திரைப்படங்களில் நடித்தவர் மிஸ்தி முகர்ஜி. இவர் தனது எடையை குறைப்பதற்காக
கீட்டோஜெனிக் எனும் டயட் முறையை பின்பற்றி வந்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் சிறுநீரகம் செயலிழந்து பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில் மிஸ்தி முகர்ஜியின் சிறுநீரகம் செயலிழக்க அவர் மேற்கொண்ட கீட்டோஜெனிக் டயட்தான் காரணம் என கூறப்படுகிறது. இது திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பலரும் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.