அடேங்கப்பா.. நடிகர் மாதவன் வாங்கியுள்ள காஸ்ட்லி சொகுசு படகு.! விலையை கேட்டு வாயை பிளந்த ரசிகர்கள்!!
காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரியால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம்!!
கீழ்பாக்கம் கல்லறை தோட்டத்தில் மயங்கி கிடந்த இளைஞர் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரியால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகம் முழுவதும் தொடர் கனமழையால் பாதிக்கப்பட்டது. மேலும் சென்னையில் பலத்த மழையால் பல முக்கிய பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளித்தது. மேலும் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்து மக்களின் இயல்பு வாழ்கை பெருமளவில் பாதிக்கப்பட்டது.
அதேசமயம் பலத்த காற்று வீசியதால் ஆங்காங்கே மரங்களும் முறிந்து விழுந்தது. இதனால் பாதிக்கப்பட்டவர்களை மாநகராட்சி பணியாளர்கள், போலீசார் மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்நிலையில் சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள கல்லறை தோட்டத்தில் மரம் விழுந்ததில் மயங்கிய நிலையில் உதயா என்ற இளைஞர் உயிருக்கு போராடியவாறு கிடந்துள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி அவரை மீட்டு தனது தோளில் சுமந்துசென்று ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் பலரும் அவருக்கு பாராட்டு தெரிவித்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.