மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிறந்தநாளில் இன்ப அதிர்ச்சி பரிசு கொடுத்த இர்பான்: ஒருநொடி ஆடிப்போன நடிகர் நெப்போலியன்.!
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வந்தவர் நெப்போலியன். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியான படங்களிலும் நடித்துள்ளார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அமைச்சரவையில் மாநில சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சராகவும் பதவிவகித்து இருக்கிறார்.
கடந்த 1991 ம் ஆண்டு பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியான புது நெல்லு புது நாடு திரைப்படத்தில் வில்லன் வேடத்தில் திரை வாழ்க்கையை தொடங்கியவர், நாயகனாகவும் நடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராகவும் இருந்தார்.
அதனைத்தொடர்ந்து, எஜமான், கிழக்கு சீமையிலே, சீவலப்பேரி பாண்டி, எட்டுப்பட்டி ராசா, போக்கிரி, தசாவதாரம் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். திரைத்துறையில் இவரின் பணியை பாராட்டி கலைமாமணி விருதும் வழங்கப்பட்டது.
இவருக்கு ஜெயசுதா என்ற மனைவியும், 2 மகன்களும் இருக்கின்றனர். ஒருகட்டத்தில் தமிழ் திரையுலகில் இருந்து தன்னை ஒதுக்கி வைத்துக்கொண்ட நெப்போலியன், அமெரிக்காவில் சென்று குடும்பத்தோடு வசித்து வருகிறார். அங்கு பல தமிழர்களுக்கும் வேலை வாங்கி வருகிறார்.
அவ்வப்போது வெளியாகும் தமிழ் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். நெப்போலியன் அமெரிக்காவில் இருக்கும்போது, தமிழகத்தை சேர்ந்த பிரபல யூடியூபர் இர்பான், நெப்போலியனின் வீட்டிற்கு சென்று இருந்தார். அதன்பின், இருவரின் குடும்பத்திற்கும் நல்ல இணக்கமான நட்புறவு நீடிக்கிறது.
இந்நிலையில், நடிகர் நெப்போலியனின் பிறந்தநாள் 2 டிசம்பர் அன்று சிறப்பிக்கப்பட்டது. இந்நிகழ்வுக்கு இர்பான் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் அமெரிக்காவுக்கு சென்று, நெப்போலியனின் பிறந்தநாள் விழாவில் நேரில் கலந்துகொண்டார். இதுகுறித்த காணொளியை தற்போது இர்பான் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.