மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
‘மறக்குமா நெஞ்சம்’ பற்றி யுவன் சங்கர் ராஜா அதிரடி அறிக்கை.! "இனி இதையும் செய்யணும்" என உறுதி.!
இசையமைப்பாளர் ரகுமானின் இசை நிகழ்ச்சி குளறுபடியான விவகாரத்தில் அவருக்கு துணை நிற்பதாக சக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் அமைந்துள்ள ஆதித்யராம் பேலஸில் ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி நடந்தது. இதில் பணம் செலுத்திய டிக்கெட் பெற்ற பல ஆயிரம் ரசிகர்களுக்கு இருக்கைகள் கிடைக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும், சாலை போக்குவரத்து நெரிசல் காரணமாக பலர் நிகழ்ச்சிக்கு வராமலேயே பல மணிநேரம் நெரிசலில் சிக்கி வீடு திரும்பியதாக கூறப்பட்டது. கலந்து கொண்ட பல ரசிகர்களுக்கு இடுப்பாடுகளில் சிக்கி காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது பற்றிய விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றது.
பலரும் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானை விமர்சித்து வரும் நிலையில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ரஹ்மானுக்கு ஆதரவாக ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். அதில்,"நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை நம்பி தான் கலைஞர்களாகிய நாங்கள் மேடையில் ரசிகர்களை உற்சாகப்படுத்த களமிறங்குகிறோம்.
ஏற்பாட்டாளர்களின் மீது நாங்கள் வைத்த நம்பிக்கையை அவர்கள் காப்பாற்றுவது அவசியம். இனி வரும் காலங்களில் நிகழ்ச்சி ஏற்பாடுகளிலும் கலைஞர்களாகிய நாங்கள் கவனம் செலுத்த வேண்டும் என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது. சக கலைஞராக இந்த சம்பவத்தில் ஏ ஆர் ரகுமானுக்கு நான் துணை நிற்கிறேன்."என்று தெரிவித்துள்ளார்.