மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#BigBreaking: ஜீ டிவி புகழ், நடன கலைஞர் ரமேஷ் பத்தாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை.. சின்னத்திரை ரசிகர்கள் சோகம்..!
பிரபல ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த நடன நிகழ்ச்சியில் பங்கேற்று தமிழக அளவில் பிரபலமானவர் ரமேஷ். இவர் சமூகவலைதளங்களில் தனது நடன வீடியோவை பதிவிட்டு ரசிகர்களின் ஆதரவை பெற்றார்.
சென்னையில் உள்ள வீட்டில் தனது குடும்பத்துடன் இவர் வசித்து வந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக இவரது இரண்டு மனைவிகளுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ஒரு மனைவி அவரை கடத்தி தாக்கியதாகவும் செய்திகள் வெளியாகி பெரும் அதிர்வலயை ஏற்படுத்தின.
இந்த நிலையில் தற்போது அவர் துணிவு உட்பட சில திரைப்படங்களில் நடிக்கவும் தொடங்கியிருந்தார். அவர்களின் வாழ்க்கை இதற்கு மேல் பிரகாசமாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நாளில், அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி செய்தி கிடைத்துள்ளது.
சென்னையில் உள்ள புளியந்தோப்பு கேபி பார்க் குடியிருப்பில் தங்கியிருந்த ரமேஷ் குடியிருப்பு வளாகத்தில் பத்தாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் அவரது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், அவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து புளியந்தோப்பு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.