மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிரபல சீரியலில் இருந்து விலகியது ஏன்?.. நெஞ்சை ரணமாக்கும் சீரியல் நாயகியின் குமுறல்..!
காய்ச்சல் என்று உடல்நிலை சரியில்லாத நாட்களில் கூட உடலை வருத்தி நடித்து தந்தபோதிலும், தன்னை மாற்றிவிட்டு மற்றொரு பெண்ணை நாயகியாக போட்டுவிட்டதாக சீரியல் நடிகை கண்ணீரில் குமுறுகிறார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "கன்னத்தில் முத்தமிட்டால்" தொடரில் நாயகியாக நடித்தவர் மனிஷா ஜித். இவர் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னாளில் சின்னத்திரைக்கு வந்தவர். "கன்னத்தில் முத்தமிட்டாள்" தொடர் தனது 100-வது எபிசோடை நெருங்கிக்கொண்டிருக்கும் வேலையில், இத்தொடரின் நாயகி மனிஷா தொடரில் இருந்து விலகியுள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், "ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முதல் நாளிலிருந்து சம்பள பாக்கி என்பது இருந்து கொண்டிருந்தது. விடுமுறை எடுக்காமல் நடித்தும் எனக்கு அவர்கள் பணம் கொடுக்கவில்லை. முதலில் தயாரிப்பாளர் என்னிடம் பணம் இல்லை என்று கெஞ்சி கேட்டுக் கொண்டதால் நான் விட்டுக்கொடுத்தேன். பின்னாட்களில் அதையே வாடிக்கையாக்கிவிட்டனர்.
தொலைக்காட்சி நிர்வாகத்திடம் இது குறித்து கேட்டால் நாங்கள் பணம் கொடுத்து விட்டோம் என்கிறார்கள். தயாரிப்பாளர் எனக்கு பணம் இன்னும் வரவில்லை என்று கூறுகிறார். இ.எம்.ஐ போல எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக பணம் தந்தாலும், ரூபாய் 6 லட்சம் வரை நிலுவையில் உள்ளது. இடையில் உடல்நிலை சரியில்லாமல் நான் மருத்துவமனையில் இருந்த சமயத்திலும் எனக்கு அவர்கள் ஒரு ரூபாய் தரவில்லை.
எனக்கு காய்ச்சல் அடித்த சமயத்தில், மறுநாளில் மழை காட்சிகள் வைத்து என்னை மேலும் கஷ்டப்படுத்தினார்கள். எவ்வளவு துயரம் வந்தாலும் காலையில் 9:00 மணிக்கு சென்று இரவு 11 மணி வரை நடித்துக் கொடுத்து தான் வந்தேன். நாங்கள் பணியாற்றும் இடத்தில் எந்த விதமான பாதுகாப்பும் கிடையாது. அங்குள்ள மின் சாதனங்களில் திடீரென ஷாக் அடிக்கும். விபத்துக்கள் ஏற்படும். அனைத்தையும் பார்த்துக் கொண்டு நடித்துக் கொண்டுதான் இருந்தோம். உடல் நிலையை பொருட்படுத்தாமல் நடித்ததற்கு அவர்கள் எதுவுமே செய்யவில்லை.
உடல்நிலை சரியில்லாத சமயத்தில் எனக்கு இரண்டு நாள்., மூன்று நாள் விடுமுறை வேண்டும் என்று கேட்டபோது கூட நீங்கள் இல்லாமல் டி.ஆர்.பி போய்விடும் என்று பல காரணங்களை கூறி உடல்நிலை வருந்தி என்னை வரவைத்தனர். ஆனால், இன்று என்னை அந்த தொடரில் இருந்து எடுத்து விட்டார்கள். என்ன காரணம் என்று கூறவில்லை. திறமைக்கு அங்கீகாரம் எப்போதும் கிடைக்கும்" என்று தெரிவித்தார்.