40 வயது கடந்த பெண்கள், சோடா, பதப்படுத்தப்பட்ட குளிர்பானம் பருகினால் பக்கவாத பேராபத்து...!
சோடா குளிர்பானங்கள், பதப்படுத்தப்பட்ட பானங்கள் போன்றவற்றை பருகும் பெண்களுக்கு பக்கவாத பிரச்சனை ஏற்படும் அபாயம் 23 % அதிகரித்து இருப்பதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.
இவ்வாறான பானங்களை பருகுவதால் இதய நோய் ஏற்படும் அபாயமும் 16 % அதிகரித்துள்ளது. சமீபத்தில், இதுகுறித்து நடைபெற்ற ஆய்வில் 81,714 பெண்கள் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இந்த 81 ஆயிரம் பெண்களும் 50 வயதை கடந்தவர்கள் ஆவார்கள்.
கடந்த 12 வருடமாக அவர்களின் உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு, சோடா பானம் போன்ற பிற பானத்தை பருகி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உடல் பருமன் கொண்ட பெண்களுக்கு இவ்வகை பாதிப்பு அதிகளவு இருக்கும் என்பது ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிற பெண்களை விட இவர்களுக்கு பக்கவாத பாதிப்பு இரண்டு மடங்கு அதிகளவிலும் இருந்துள்ளது. மாதவிடாய் சுழற்சி முடிவடையும் காலகட்டத்தில் உள்ள பெண்கள் பதப்படுத்தப்பட்ட குளிர்பானத்தை உபயோகம் செய்வதை தவிர்ப்பது நல்லது.
சுவைக்காக சேர்க்கப்படும் ரசாயனம் கலந்த பானத்தை குடிக்க கூடாது. இயற்கையான பழங்களில் இருந்து வீடுகளில் தயாரிக்கப்படும் பழச்சாறுகளை குடிக்கலாம். இளநீர், பதநீர் போன்ற உடலுக்கு நன்மையை ஏற்படுத்தும் இயற்கையான பானங்களை குடிக்கலாம்.