மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உங்களுக்கு அடிக்கடி பசிக்குதா?.. அலட்சியம் செய்யாதீங்க..! ஒருவேளை இந்த பிரச்சனையாகூட இருக்கலாம்..!!
நமது உடல் ஆரோக்கியத்திற்கு வைட்டமின்கள், கார்போஹைட்ரேட்டுகள், நார்ச்சத்து, கொழுப்பு, கால்சியம் போன்றவை அத்தியாவசியமாகும். இவை நாம் உண்ணும் உணவில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் மூலமாக எடுத்துக்கொள்ளப்படுகின்றன. நாம் சில மணிநேரம் சாப்பிடாமல் இருக்கும் போது ஏற்படும் பசி இயல்பு கொண்டது.
ஆனால் சாப்பிட்ட பின்னரும் பசி உணர்வு இருந்தால் உடல் நலனில் பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம். மனஅழுத்தம் அதிகப்படியான பசிக்கு காரணமாக அமைகிறது. பதற்றமாக இருக்கும்போது நமது உடலில ஹார்மோன் அதிகளவு சுரந்து பசியை தூண்டும்.
உடலில் எரிக்கப்படும் கலோரிகளுக்கும் குறைவான கலோரிகளை உட்கொண்டால் விரைவில் பசி ஏற்படும். உடலுக்கு தேவைப்படும்போது தேவையான அளவு சத்துள்ள ஆகாரத்தை சாப்பிடவேண்டும். நாம் சாப்பிடும்போது டிவி, செல்போன் பார்த்தால் அது மேலும் பசி உணர்வை தூண்டிகொண்டே இருக்கும்.
அதிகப்படியான உடற்பயிற்சியும் நல்ல பசிக்கு காரணமாக அமைகிறது. அதேபோல அவசரகதியில் வேகமாக சாப்பிட்டாலும் வயிறு சரிவர நிரம்பாமல் இருக்கும். இதனால் சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே மீண்டும் பசி உணர்வை தூண்டும்.