#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அடேங்கப்பா.. அத்தி மரம், பழம், இலை, பாலினால் இவ்வுளவு நன்மைகளா?.. அசத்தல் தகவல்.!
அத்தி பூப்பதை காண்பது என்பது மிகவும் அரிதான ஒன்றாகும். ஆனால், அது தனது அத்திப்பழங்களை சரியான தருணங்களில் பழுக்க வைத்திடும். அத்திப்பழத்தின் பால், பட்டை, பழம் போன்றவை நல்ல பலன் தரக்கூடியவை, அத்தி மரம், அதில் கிடைக்கும் பொருட்கள் என ஒவ்வொன்றும் மருத்துவ பயனை தன்னகத்தே கொண்டுள்ளது. அத்திப்பழத்தை அன்றாட வாழக்கையில் சேர்த்துக்கொண்டால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.
அத்தியில் நாட்டு அத்தி, வெள்ளை அத்தி, நல்ல அத்தி என வகைகள் உள்ளன. அத்தி மரம் 10 மீட்டர் வரை வளரும். இதன் இலைகளில் 3 நரம்புகள் இருக்கும். அத்திப்பழம் நல்ல நறுமணத்துடன் இருந்தாலும், அதனை வெட்டிப்பார்த்தால் சிறிய புழு அல்லது பூச்சி இருக்கலாம். சிலர் அதனை கண்டுகொள்ளாமல் அப்படியே சாப்பிடுவர். சிலர் அதனை அப்புறப்படுத்திவிட்டு சாப்பிடுவர்.
அத்திப்பழத்தில் புரதம், சர்க்கரை, கால்சியம், பாஸ்பிரஸ், வைட்டமின் ஏ & சி மற்றும் இரும்புசத்து போன்றவை அதிகளவில் இருக்கிறது. இது பிற பழங்களை விட 4 மடங்கு அதிகளவு சத்துக்கள் கொண்டதாகும். அத்தி இலைகள் பித்தம் மற்றும் அது சார்ந்த நோய்களை குணப்படுத்தும் வல்லமை கொண்டது.
காயத்தினால் ஏற்படும் இரத்தப்போக்கை நிறுத்தும் குணமும் அத்திக்கு உண்டு. அத்தி இலையை கொதிக்கவைத்து, அந்த நீரை கொப்புளித்தால் வாய்ப்புண் பிரச்சனை சரியாகும். ஈறுகளில் இருந்து சீழ் வடியும் பிரச்சனை குணமாகும். அத்திப்பழம் உடலில் உள்ள இரத்தத்தினை அதிகரிக்கும்.
அத்திப்பழத்தை தேனில் ஊறவைத்து சாப்பிடலாம். இதனால் உடலின் ஜீரண சக்தி அதிகரிக்கும். உடலில் உள்ள பித்தத்தை வியர்வை வழியாக வெளியேற்றி, உடலுக்கு சுறுசுறுப்பை ஏற்படுத்தும். வாய் துர்நாற்றம் சரியாகும். நெல்லிக்கனி போல அத்தியையும் சாப்பிட்டு வந்தால் வெட்டை நோய் பிரச்சனை வராது. அதனைப்போல, வெண்புள்ளி, வெண் குஷ்டம் போன்றவையும் சரியாகும்.
தினமும் இரவில் 5 அத்திப்பழம் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை சரியாகும். அத்தியை வினிகரில் ஊறவைத்து தினமும் 2 முறை சாப்பிட்டு வந்தால் போதைப்பழக்கத்தால் ஏற்பட்ட கல்லீரல் வீக்கத்திற்கு சரியான மருந்தாகும். சர்க்கரை நோயால் ஏற்படும் பிளவு, கீழ்வாதம் மற்றும் மூட்டு வீக்கம் போன்ற பிரச்சனைக்கு அத்திபாலினை கொண்டு பத்து போட்டால் சரியாகும்.