ஷிவ்ராஜ்குமாரின் மிரட்டல் லுக்.. 45 படத்தின் அலறவைக்கும் டீசர்.!
இவ்வுளவு வன்ம வாதிகளாடா நீங்க? சாதி வெறியில் இளைஞர் மீது கொடூர தாக்குதல்.!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை, மேலபிடவுர் கிராமத்தில் வசித்து வரும் இளைஞர் அய்யாசாமி. இவர் சிவகங்கையில் செயல்படும் அரசு கல்லூரியில், மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார். அய்யாசாமி பட்டியலினத்தை சேர்ந்த இளைஞர் ஆவார்.
இவர் சொந்தமாக புல்லட் வாகனம் வைத்து வரும் நிலையில், இவரின் நிலை ஒருசில இளைஞர்களுக்கு பிடிக்கவில்லை. இந்த இளைஞர்கள் சாதிய ரீதியாக எண்ணம் கொண்டவர்கள் ஆவார்கள். இதனிடையே, நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்றுகொண்டு இருந்த அய்யாசாமியை இந்த கும்பல் வழிமறித்துள்ளது.
இதையும் படிங்க: சிவகங்கை: ஓடஓட விரட்டி பயங்கரம்.. அரசு மருத்துவமனை வளாகம் அருகே இளைஞர் படுகொலை.!
பாதிக்கப்பட்ட இளைஞரை புதிய தமிழகம் கட்சியின் வழக்கறிஞர் பிரிவு அணியினர் சந்திப்பு
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே சாதி வெறியர்களால் கைகள் வெட்டப்பட்டு
— PT IT Wing (@PTITWing) February 14, 2025
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இளைஞர் அய்யாசாமியை
புதிய தமிழகம் கட்சியின் வழக்கறிஞர்கள் பிரிவிலிருந்து நேரில் சந்தித்து ஆறுதல் கூறப்பட்டது! pic.twitter.com/2c0rtevihm
கைகளில் வெட்டு:
மேலும், அந்த சாதியில் பிறந்து நீ புல்லட் ஓட்டலாமா? என பொங்கிய நபர்கள், அவரின் கையை வெட்டி இருக்கின்றனர். இந்த சம்பவத்தில் காயமடைந்த அய்யாசாமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனிடையே, அய்யாசாமியின் குடும்பத்தினர் மருத்துவமனைக்கு சென்ற பின்னர், கும்பலை சேர்ந்தவர்கள் அவர்களின் வீட்டையும் சூறையாடி இருக்கின்றனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஆதி ஈஸ்வரன், வல்லரசு, வினோத் ஆகியோரை கைது செய்தனர்.
இதையும் படிங்க: கள்ளச்சாராயம் குடிச்சவனுக்கு 10 இலட்சம் எங்களுக்கு 5 தானா? - மின்சாரம் தாக்கி மாணவர் பலி., உறவினர்கள் போர்க்கொடி.!