ஐயப்ப பக்தர்களுக்கு நேர்ந்த சோகம்; பேருந்து - வேன் மோதிய விபத்தில் 3 பேர் பலி.!



in Krishnagiri Bus Accident 3 Devotees Died 

 

கிருஷ்ணகிரியில் இருந்து ஐயப்ப பக்தர்களை ஏற்றுக்கொண்ட பேருந்து, சபரிமலைக்கு பயணம் செய்தது. இதேபோல, சபரிமலையில் இருந்து பக்தர்களை ஏற்றுக்கொண்ட வேன், ஓசூருக்கு திரும்பிக்கொண்டு இருந்தது.

இரண்டு வாகனமும் தேனி பகுதியில் வந்தபோது, நேற்று இரவில் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் வாகனத்தில் பயணம் செய்த பலரும் காயமடைந்தனர். 

இதையும் படிங்க: 9 ம் வகுப்பு மாணவியின் கழுத்தில் தாலி; ஷாக்கான ஆசிரியர்கள்., கிருஷ்ணகிரியில் பகீர்.!

Krishnagiri

வாகனம் மோதி விபத்து

இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். விபத்தில் 10 வயது சிறுவன் உட்பட 3 பேர் உயிரிழந்தது தெரியவந்தது.

மேலும், 10 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க: இருசக்கர வாகனத்தில் சென்ற மருத்துவ பணியாளருக்கு நேர்ந்த சோகம்; லாரியில் மோதி பலி.!