வாழைத்தண்டை ஜூஸ்போட்டு குடித்தால் இவ்வுளவு நன்மைகள் கிடைக்குமா?.. அசத்தல் டிப்ஸ், தெரிஞ்சிக்கோங்க.!



Benefits of banana stem juice

காய், பழம், தண்டு, இலை என தனது மொத்த பாகத்தையும் மனிதர்களுக்கு உணவாக்கி, அந்த உணவு மூலமாக பல்வேறு சத்துக்களை உடலுக்கு கிடைக்க வழிவகை செய்தது வாழைமரம். சுபகாரியம் உள்ள வீடு முதல் இறப்பு வீடு வரை உபயோகம் செய்யப்படும் வாழையில் பல நன்மைகள் நிறைந்து கிடக்கின்றன. 

இவ்வகையான அற்புத திறன் கொண்ட வாழை மரத்தின் வாழைத்தண்டை சாறாக்கி பருகினால் சிறுநீரக கற்கள் சேருவது தடுக்கப்பட்டு, சிறுநீரக கற்கள் கரைக்கப்படும். 

health tips

இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் உடல் எடையை குறைக்க விரும்பும் நபர்கள் தினமும் காலை நேரத்தில் ஒரு டம்ளர் ஜூஸ் குடிக்கலாம். இரும்பு மற்றும் விட்டமின் பி6 சத்துக்கள் ரத்தத்தின் ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து ரத்தசோகை பிரச்சனையை குணமாக்கும். 

சர்க்கரை நோயாளிகளும் வாழைத்தண்டை எடுத்துக் கொள்ளலாம். அதேபோல, வாழைத்தண்டுடன் இஞ்சி சாறு சேர்த்து குடித்தால் வயிற்றில் உள்ள கொழுப்புகள் குறையும். மலச்சிக்கலால் பாதிக்கப்படும் நபர்களுக்கு வாழைத்தண்டு ஜூஸ் மிகவும் சிறந்தது. இது செரிமான தன்மையை அதிகப்படுத்தும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவி செய்யும்.