மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
டயட் இருக்கும் பெண்களுக்கு மார்பக தசைகள் சுருங்கும் பேராபத்து.. மருத்துவர்கள் எச்சரிக்கை.!
உடல் எடையை திடீரென ஏற்றி, இறக்கும் பெண்களின் மார்பக தசைகளில் சுருக்கம் ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
சில பெண்கள் தங்களின் உடல் எடை அதிகமாக இருப்பதாக எண்ணி அதனை குறைக்க நினைப்பார்கள். சிலருக்கு அதிகமாக இருக்கும் உடல் எடையை குறைக்க விரும்புவார்கள். இவர்களில் பலரும் யாரோ ஒருவரின் ஆலோசனையை கேட்டு டயட் இருந்து உடல் எடையை குறைப்பார்கள். அவ்வாறு அவர்கள் உடல் எடையை குறைத்து, பின்னர் அவர்கள் எடுத்துக்கொள்ளும் உணவால் உடல் எடை மீண்டும் அதிகரிக்கும்.
இவ்வாறு உடல் எடை ஏறிய பின்னர் மீண்டும் குறைத்துக்கொண்டு வந்தால், பெண்களின் மார்பக தசைகளில் சுருக்கம் ஏற்படும் எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மார்பகத்தின் அழகுக்கு முக்கிய தேவையாக இருப்பது புரோட்டின். புரோட்டின் மார்பக அளவையும், தோற்றத்தையும் மெருகூட்டுகிறது. இதனால் புரோட்டீன் வகை உணவுகளை தினமும் சேர்த்துக்கொள்வது நல்லது.
உடற்பயிற்சி மேற்கொள்ளும் பெண்கள் இயன்றளவு வெந்நீரில் குளிப்பதை தவிர்ப்பது நல்லது. தொடர்ச்சியாக வெந்நீரில் குளித்து வந்தால் மார்பக தசைகள் தொய்வடையும்.