இனி சிரிப்புக்கு பஞ்சமில்லை.. விஜய் டிவியில் வருகிறது ரசிகர்களின் பேவரைட் ஷோ.! வைரல் வீடியோ!!
இரவில் ஏன் கீரை சாப்பிடக்கூடாது தெரியுமா?
கீரைகளில் அதிகமான சத்துக்கள் நிறைந்துள்ளதை நாம் அறிந்திருக்கிறோம். கீரைகளில் நார்ச்சத்து அதிகம். வைட்டமின்களும், தாதுக்களும் நிறைந்துள்ள கீரையை தினமும் ஒரு வேளையாவது எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். ஆனால் அந்தக் கீரையை இரவில் சாப்பிடலாமா என்றால், வேண்டாம் என்பார்கள்.
ஏனென்றால் கீரைகளில் உள்ள பச்சையம் மற்றும் நார்ச்சத்து எளிதில் ஜீரணிக்க கூடியது அல்ல. இரவு நேரங்களில் நமது உடலில், அதனை ஜீரணிக்க கூடிய நொதிகள் சுரக்கும் அளவு குறைவாகவே இருக்கும். இரவில் கீரையை சாப்பிடுவது ஒரு விதமான மந்த நிலையை ஏற்படுத்தும்.
அதேபோல் இறைச்சியும் இரவில் ஜீரணமாவது கடினம். எனவே இறைச்சியுடன் சேர்த்து கீரையை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். பால் பொருட்களுடன் கீரையை சேர்த்து சாப்பிடுவது ஒரு சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். சிலருக்கு ஜீரணமாகாமல் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படலாம்.
மேலும் சமைத்த கீரையை பிரிட்ஜில் வைத்து அடுத்த நாள் சாப்பிடுவதும் உகந்ததல்ல. கீரையை தயிருடன் சேர்த்து சாப்பிடுவதும் ஜீரணிப்பதில் சிக்கல்களை உருவாக்கும். எவ்வளவு சிறப்பு வாய்ந்த உணவாக இருந்தாலும், அதை எப்போது சாப்பிட வேண்டுமோ, அந்த நேரத்தில்தான் சாப்பிட வேண்டும்.
எனவே இரவு நேரங்களில் எளிதில் ஜீரணிக்க கூடிய கஞ்சி போன்ற உணவுகள் அல்லது ஆவியில் வேக வைத்த உணவுகளை உண்பது நல்லது.