மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஃபிரிட்ஜில் வைத்த ஜில் தண்ணீர் குடிப்பவர்களே! உஷார்.. இவ்வளவு ஆபத்துக்களா.?!
வெயிலில் சுற்றி திரிந்த பின், அல்லது கடுமையான வேலைக்கு பின்பு, உடற்பயிற்சி அல்லது ஜிம்மில் ஒர்க் அவுட் செய்த பின்னர் பலரும் பிரிட்ஜில் வைத்த ஜில்லென்ற குளிர்ந்த நீரை குடித்து உடலை ஆசுவாசப்படுத்தி கொள்வார்கள். இந்த பழக்கம் எப்படிப்பட்ட தீங்கை ஏற்படுத்தும் என்பதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
உடலில் உள்ள கொழுப்புகளை கரையவிடாமல் இந்த குளிர்ந்த நீர் தடுக்கிறது. எனவே உடல் எடை அதிகரிக்கவும், இதய பாதிப்பை ஏற்படுத்தவும் இந்த குளிர்ந்த நீர் வழிவகை செய்கிறது. மலச்சிக்கல் பிரச்சினை இருப்பவர்கள் குளிர்ந்த தண்ணீரை குடிக்கவே கூடாது. இது வயிற்றில் இருக்கும் மலத்தை கடினமாக்கும்.
செரிமான பிரச்சனைகளையும் ஏற்படுத்துகிறது. உணவை சாப்பிட்டவுடன் குளிர்ந்த நீரை குடிப்பது அந்த உணவை செரிக்க விடாமல் தடுக்கிறது. வயிற்றுப் பிரச்சனை இருப்பவர்கள் குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் குளிர்ந்த நீரை குடிக்கவே கூடாது. மேலும், இந்த குளிர்ந்த நீர் இதயத்துடிப்பை குறைப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. கழுத்து நரம்புகளை பாதித்து இதயத்துடிப்பை இது குறைக்க கூடுமாம்.
இதனால், தொண்டையில் சளியில் உருவாக்கப்படும் என்பதால் சுவாச பிரச்சனைகள் ஏற்படும். குளிர்ந்த நீரை குடிப்பதால் சளி, தொண்டை புண், இருமல், தொண்டையில் வீக்கம் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படலாம். குளிர்ந்த நீரை குடிப்பதால் மண்டையில் இருக்கும் நரம்புகள் பாதிப்படைகிறது. இதனால், தலைவலி ஏற்படும்.
கோடை காலத்தில் சாதாரணமாகவே அதிகமாக தலை வலிக்கும். சூரிய ஒளி காரணமாக இது ஏற்படும் என்று பலரும் நினைத்துக் கொள்கிறார்கள். சூரிய ஒளியில் இருக்கும் போது திடீரென உடலை குளிர்விக்கும் விதமாக லெஸ்ஸி, குளிர்ந்த நீர் மற்றும் குளிர்ந்த பானம் உள்ளிட்டவற்றை குடிப்பதால் இந்த தலைவலி ஏற்படக்கூடும். வெயில் காலத்தில் சாதாரண தண்ணீரை மட்டும் குடிக்க வேண்டும். இதுதான் அனைத்து நோய்களிலிருந்தும் தப்பிக்க உதவுகிறது.