மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆரஞ்சு பழத்தின் அற்புத நன்மைகள்.!
ஆரஞ்சு பழத்தில் உடலுக்கு தேவையான பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது. குறிப்பாக ஆரஞ்சு பழத்தில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. மேலும் சளி மற்றும் இருமல் போன்ற தொற்றுகளில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.
ஆரஞ்சு பழத்தில் உள்ள வைட்டமின் சி கொலஜென் உற்பத்தியை அதிகப்படுத்துகிறது. மேலும் இதில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட், நார்சத்து, மினரல்ஸ் செல்களின் வளர்ச்சிக்கு உதவியாக உள்ளது.
குறிப்பாக குளிர்காலங்களில் தொடர்ந்து ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டு வந்தால் நமது தோல் ஈரப்பதத்துடன் காணப்படும். ஆரஞ்சு பழத்தில் அதிகளவில் நீர் சத்து உள்ளதால் நமது உடலில் உள்ள நீரின் அளவை சீராக வைக்க உதவும்.
மேலும் ஆரஞ்சு பழத்தில் உள்ள நார் சத்து ரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவுகிறது. சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் மட்டும் ஆரஞ்சு பழத்தை தவிர்க்கலாம்.