மழைக்காலத்தில் உடலை பாதுகாக்கும் துளசியின் தூய்மையான நன்மைகள்.!
வயல் வெளிகள் மற்றும் கொள்ளை புறங்களில் எளிதாக கிடைக்கும் மூலிகை துளசி. தினமும் துளசியை சாப்பிடுவதால் சுவாச கோளாறுகளை தடுக்கிறது. மேலும் துளசி இலை சருமத்தில் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளை தடுத்து அழகான சருமத்தை கொடுக்க உதவுகிறது.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் துளசி இலைகளை சிறிது சாப்பிட்டு வந்தால் அஜீரண கோளாறு, வயிற்று பிரச்சினைகள், சளி, தலைவலி, இருமல் போன்ற பிரச்சினைகள் குணமாகும். அந்த வகையில் தினமும் துளசி சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து இந்த பதிவில் நாம் காணலாம்.
தற்போதைய காலகட்டத்தில் பல்வேறு வகையான வைரஸ் காய்ச்சல்கள் பரவுகிறது. இதற்கு நாம் மாத்திரை மற்றும் மருந்துகளை பயன்படுத்துகிறோம். ஆனால் இதற்கு மாற்றாக இயற்கை மூலிகைகளை பயன்படுத்தினால் உடலில் ஆரோக்கியம் அதிகரிப்பதோடு விரைவில் குணமாகும். அதன்படி காய்ச்சல் இருந்தால் தொடர்ந்து துளசி சாப்பிடுவதால் காய்ச்சல் குணமாகும்.
அதேபோல் தலைவலி, இருமல், சளி போன்ற தொந்தரவு இருந்தால் உடனடியாக துளசி சாப்பிடுவதால் நல்ல பலன் கிடைக்கும். மேலும் ஒற்றைத் தலைவலி சைனஸ் உள்ளவர்கள் துளசி சாப்பிடுவதால் நல்ல பலன் கிடைக்கிறது.
துளசி இலைகளை தினமும் சாப்பிடுவதன் மூலம் நுரையீரலில் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. ஏனெனில் துளசியில் உள்ள அமிலங்கள் நுரையீரலை பாதுகாத்து சீராக சுவாசிக்க வைக்க உதவுகிறது.
மேலும் துளசியில் உள்ள கிருமி நாசினி பண்புகள் பல்வேறு வைரஸ் தொற்றுகளில் இருந்து உடலை பாதுகாக்க உதவுகிறது. தினமும் துளசி சாப்பிடுவதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.