உயர் இரத்த அழுத்தம், பக்கவாதம்..! மூளை பக்கவாத பாதிப்பு., இளைஞர்களே உஷார்..!!



How to Avoid Stroke Blood Pressure Brain Affected Tamil Tips

உடல் இயக்கத்தையும், மனதின் இயக்கத்தையும் கட்டுப்படுத்தும் உறுப்பாக மூளை செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு உயிருக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் மூளை பாதிக்கப்படும் போது உடல் இயக்கம், பேசும் தன்மை, சிந்தனையாற்றல் செயலிழப்பு போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்கிறது. விபத்து, காயம் மற்றும் மூளை இரத்தக்குழாய்யில் ஏற்படும் தாக்கம் காரணமாக மூளை பாதிப்படையலாம். 

மூளையில் உள்ள இரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படுதல், மூளை இரத்தக்குழாய் தெறித்து இரத்தக்கசிவு ஏற்பட்டு பக்கவாதம் ஏற்படுதல் போன்ற பல்வேறு பிரச்சனைகள் உள்ளது. உலகளவில் இவ்வாறான பிரச்சனையால் 6 வினாடிக்கு ஒருவர் பக்கவாத பாதிப்பை எதிர்கொள்கிறார்கள். வருடத்திற்கு ஒன்றரை கோடி நபர்கள் பக்கவாத பிரச்சனையால் பாதிக்கப்டுகின்றனர். இவர்களில் 60 இலட்சம் பேர் உயிரிழக்கின்றனர். 

Tamil Tips

பிற 50 இலட்சம் பேர் உடலுறுப்பு செயலிழப்புடன் வாழ்ந்து வருகின்றனர். இந்தியாவை பொறுத்த வரையில் ஒரு இலட்சம் நபர்களில் 200 பேர் பக்கவாதத்தால் பாதிக்கப்டுகின்றனர். இவர்களில் 2 % நபர்களே மருத்துவமனையில் அனுமதியாகிக்கின்றனர். மூளை நரம்பியல் பிரிவில் ஏற்படும் பாதிப்புக்கு 20 % பேர் சிகிச்சை எடுக்கின்றனர். 

பக்கவாத பிரச்சனை என்பது பொதுவாக முதியோர்களுக்கு அதிகளவு ஏற்படும். ஆனால், வாழ்க்கைமுறை மாற்றம் காரணமாக இளைஞர்களும் பக்கவாத பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர். இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், புகைப்பழக்கம், புகையிலை பழக்கம், அதிகளவு கொழுப்புசத்து, உடற்பருமன், உடற்பயிற்சி செய்யாதவர்களுக்கு பக்கவாதத்தால் பாதிக்கப்டுகின்றனர். 

உடலின் ஒரு பகுதி அல்லது அங்கம் திடீரென செயலிழப்பது, கை-கால், முகம் செயலிழப்பது, பேச இயலாமல் போவது, திடீர் குழப்பநிலை போன்றவை பக்கவாதத்தின் அறிகுறி ஆகும். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவரை மூன்றரை மணிநேரத்திற்குள் மருத்துவமனையில் அனுமதி செய்து சிகிச்சையை தொடங்க வேண்டும். இதனால் உடல் இயக்கப்பாதிப்பு தவிர்க்கப்படலாம். 

Tamil Tips

அதிகளவு இரத்த அழுத்தம் ஏற்படும் பட்சத்தில், மூளையில் இரத்தக்கசிவு ஏற்படும். இதனால் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள், அதற்கான மாத்திரையை எடுத்துக்கொள்ள வேண்டும். புகை மற்றும் புகையிலை பழக்கத்தை வைத்திருப்பவர்கள், அதனை கைவிடுவது உங்களின் உடல் நலத்திற்கு நல்லது. கொழுப்பு சத்து இருக்கும் உணவுகளை குறைவாக சாப்பிடுதல், உணவில் உப்பை குறைவாக சேர்த்துக்கொள்ளுதல் நல்லது.

கோபம் மற்றும் மன அழுத்தம் என்பது குறைக்க வேண்டிய ஒன்றாகும். பற்களில் கரை, ஈறுகளில் சீல் பிடித்தல் மற்றும் வாயில் துர்நாற்றம் உள்ளவர்களுக்கும் பக்கவாதம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இதனால் பற்கள் சுத்தமும் முக்கியத்தும் ஆகிறது.