மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இளம் வயது முதல் பெரியவர் வரை தாக்கும் நோய்!. அதை எவ்வாறு தடுப்பது?
இன்றைய காலகட்டத்தில் "அல்சர்’ என்னும் குடல்புண்ணால் பலரும் அவதிப்படுகின்றனர். அதற்கு முக்கிய காரணம் நமது உணவு பழக்கவழக்கமே. அனைத்து வயதினரையும் பாதிக்கும் ஒரே நோய் அல்சர் நோயாக உள்ளது.
சரியான நேரத்தில் சரியாக உணவு உண்ணாமல் சாப்பாட்டை தள்ளிப்போடுவது குடல்புண்ணுக்கு முக்கியக் காரணமாகிறது. சரியான நேரத்தில் சாப்பிடாதபோது, இரைப்பையில் சுரக்கும் செரிமானத்துக்கான அமிலங்கள் புண்களை உண்டாக்குகின்றன.
இதனால் கடுமையான வயிற்றுவலி ஏற்படும். தொடக்கத்திலேயே கவனிக்கவில்லை என்றால் மோசமான பாதிப்புக்கு உள்ளாக நேரிடும். சில எளிய வழிமுறைகளின் மூலமாகவே ஆரம்ப நிலை குடல்புண்ணை குணமாக்கலாம்.
அல்சர் வராமல் தடுக்க எளிய வழிமுறைகள்:
முட்டைக்கோஸ், பாகற்காய் மற்றும் முருங்கைகாயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் குடல்புண் குணமாகும். தினமும் சாதத்தில் தேங்காய்ப் பால் ஊற்றிச் சாப்பிட்டு வரலாம்.
தினமும் ஆப்பிள் பழச்சாறு, அகத்திக் கீரைசாறு, பீட்ரூட் சாறு குடித்து வந்தாலும் அல்சர் பிரச்சினையில் இருந்து விடுபடலாம். நெல்லிக்காய்ச் சாறில் தயிர் சேர்த்து குடித்து வந்தாலும் நிவாரணம் கிடைக்கும்.
தினமும் காலையில் வெதுவெதுப்பான தண்ணீரில் இரண்டு டீஸ்பூன் தேனை ஊற்றிக் குடித்தால், அல்சரால் ஏற்படும் வயிற்று எரிச்சல் சரியாகும். பாக்டீரியா எதிர்ப்புப் பொருள் நிறைந்துள்ள வெள்ளைப்பூண்டை தேன் கலந்து சாப்பிடலாம்.
வெந்தயம் கலந்த டீ, கற்றாழைச் சாறு ஆகியவை குடல்புண்ணுக்கு ஒரு நல்ல தீர்வாகும். குறிப்பாக அதிகளவு தண்ணீர் பருக வேண்டும்.