மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#HealthTips: இரத்த அழுத்த பிரச்சனையை இயற்கையாக குறைக்க என்ன செய்யலாம்?..!
சாதாரண மனிதனின் இரத்த அழுத்தம் 80 முதல் 120 புள்ளிகளுக்குள் இருக்க வேண்டும். இதற்கு கீழாக செல்வது அல்லது 120-க்கு மேலே செல்வது இரத்த அழுத்த பிரச்சனைகளாக கருதப்படுகிறது. அத்துடன் 80-க்கு கீழே இருந்தால் குறைந்த இரத்த அழுத்தம் என்றும், அதிகமானால் உயர் இரத்த அழுத்தம் என்றும் கூறப்படுகிறது.
இது உடல் நிலையை பொருத்தும் மாறுபடும். ரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுப்பதற்கும், ரத்த அழுத்தத்தை குறைக்கவும் இயற்கை முறைகள் இருக்கின்றன. ஐந்து செம்பருத்தி இதழ், 5 வெண்தாமரை இதழில் எலுமிச்சம் பழச்சாற்றை சேர்த்து ஒரு டம்ளர் நீராக சுண்டக்காய்ச்சி குடிக்கலாம். சீரகம், கொத்தமல்லி போன்றவற்றை சேர்த்து வடிகட்டி அந்த நீரை குடிக்கலாம்.
இதயத்தை பலப்படுத்த மருதம்பட்டை சூரணத்தை, ஒரு கிராம் வீதம் 3 வேளை என சாப்பிடலாம். ஐந்து பற்கள் வெள்ளை பூண்டை எடுத்து, அதனை சுட்டு சாப்பிடலாம் அல்லது நீரில் வேகவைத்து சாப்பிட வேண்டும்.
1 கிராம் கசகசாவை அரைத்து பாலில் கலந்து தூங்குவதற்கு முன் இரண்டு மணிநேரம் முன்பாக காய்ச்சி குடித்தால், தூக்கமின்மை பிரச்சனை சரியாகும். ஐந்து சிறிய வெங்காயத்தை எடுத்து சிறு துண்டுகளாக மாற்றி, மோரில் கலந்து சாப்பிட நீண்ட நாட்கள் வாழலாம்.