மகளிர்பக்கம்: பெண்களை வாட்டி வதைக்கும் கருப்பைவாய் புற்றுநோய்..! அறிகுறி, ஆலோசனைகள் என்னென்ன?..!!
உலகளவில் வருடத்திற்கு கிட்டத்தட்ட 3 இலட்சம் பெண்கள் கருப்பை வாய் புற்றுநோயின் காரணமாக உயிரிழக்கின்றனர் என்று உலக சுகாதார நிறுவன ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பெண்களை அதிகளவில் பாதிக்கும் நோயாக கருப்பைவாய் புற்றுநோய் இருக்கிறது. இதனால் இந்தியாவில் ஒவ்வொரு நாளிலும் 200 க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். அது குறித்த விழிப்புணர்வு கட்டாயம் இருக்கும் பட்சத்திலேயே அதனை தவிர்க்க இயலும்.
கருப்பைவாய் புற்றுநோயின் அறிகுறிகள்:
மாதவிடாய் நாட்களில் அதிகளவு இரத்தம் வெளியேறுதல், வெள்ளைப்படுதல், இடுப்பு மற்றும் முதுகு - கால் பகுதிகளில் கடுமையான வலி ஏற்படுவது, வாந்தி, அதிகளவு உடற்சோர்வு போன்றவை ஆகும்.
கருப்பைவாய் புற்றுநோயில் இருந்து தப்பிக்க யோசனைகள்:
தினமும் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி செய்வது, உடல் எடையை கட்டுக்குள் வைத்திருப்பது, அமிலத்தன்மை உடைய உணவுகளை தவிர்ப்பது, துரித உணவுகளை தவிர்ப்பது வேண்டும்.
ஒமேகா 3 கொண்ட உணவுகளை சாப்பிடுதல், சத்தான காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்றவற்றை சாப்பிட வேண்டும். குழந்தைப்பேறுக்கு மத்தியில் போதிய இடைவெளி வேண்டும். மேலும், பிறப்புறுப்பை எந்த சமயத்திலும் சுத்தமாக வைக்க வேண்டும்.
மாதவிடாய் நாட்களின் போது சானிட்டரி நாப்கினை 3 மணிநேரத்திற்கு ஒருமுறை கட்டாயம் மாற்ற வேண்டும். நாம் வசிக்கும் இடத்தில் உள்ள கழிப்பறையை சுத்தமாக வைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்.