தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
LadiesCorner: வெள்ளைப்படுதல் பிரச்சனையால் அவதிப்படும் பெண்கள்.. இயற்கை வைத்தியம் என்ன?.!
வெள்ளைப்படுதல் பிரச்சனை என்பது இன்றளவில் பல பெண்களுக்கு ஏற்படுவது வாடிக்கையாகியுள்ளது. மாதவிடாய் சுழற்சியை சந்திக்கும் ஒவ்வொரு பெண்ணும் எதோ ஒரு நாளில் வெளிப்படுதல் பிரச்சனையை கட்டாயம் அனுபவிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. மாதவிடாய் நாட்களுக்கு முன்னதாகவே சிலருக்கு வெள்ளைப்படுதல் ஏற்படும். இது இயல்பான ஒன்றே. சிலருக்கு எப்போதும் வெள்ளைப்படுதல் ஏற்படலாம். அவர்கள் உடலை கவனிப்பது நல்லது.
அதிகமாக வெள்ளைப்படுதல் பிரச்சனை ஏற்படுவது, அரிப்பு எடுப்பது, துர்நாற்றம் மற்றும் மாதவிடாய் நிறம் மாற்றம் போன்ற பிரச்சனை இருந்தால் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. இந்த பிரச்சனையை சரி செய்ய வீடு வைத்திய முறைகளையும் மேற்கொள்ளலாம். மஞ்சள் மற்றும் பச்சை நிறங்களில் வெள்ளைப்படுதல் பிரச்சனை ஏற்படும் பட்சத்தில், உடலை பராமரிப்பது கட்டாயம் ஆகும். தேவை என்றால் மகப்பேறு மருத்துவரை சந்திக்கலாம்.
சிட்ரஸ் - வைட்டமின் சி:
சாத்துக்குடி, எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு பழச்சாறினை குடித்து வந்தால், அதில் உள்ள வைட்டமின் மற்றும் ஆன்டி ஆக்சிடண்ட் பாக்டீரியா வளர்ச்சியை அழித்துவிடும். இதனால் அந்தரங்க உறுப்பில் ஏற்படும் துர்நாற்றம் சரியாகும்.
மஞ்சள் பால்:
ஒரு குவளை அளவுள்ள வெதுவெதுப்பான பாலில் அரை கரண்டி அளவு மஞ்சள் தூள், பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வர வைரஸ் கிருமி நீங்கும். இதனால் வெள்ளைப்படுதல் பிரச்சனை சரியாகும்.
சில பெண்களுக்கு உடலின் சூடு காரணமாக வெள்ளைப்படுதல் பிரச்சனை இருக்கும். இயற்கையாகவே சில பெண்களின் உடல் சூடான அமைப்பின் காரணமாக இது ஏற்படலாம். அதிக மன அழுத்தம், ஒற்றை தலைவலி, அதிக கோபம் போன்றவையும் வெள்ளைப்படுதல் பிரச்சனையை ஏற்படுத்தும். இதனால் உடல் சூட்டினை குறைத்து வெள்ளைப்படுதலை தடுக்க 3 நாட்களுக்கு ஒருமுறை இளநீர் குடிக்கலாம்.
உணவில் தினமும் அதிகளவு காய்கறிகளை சேர்த்துக்கொள்ளுதல், நீர்ச்சத்துள்ள பழங்களை சாப்பிடுதல், ஆரோக்கியம் தரும் பழங்களை சாப்பிடுவது போன்றவை மூலமாக வெள்ளைப்படுதல் ஏற்படும்.
தண்ணீர்:
சராசரியாக பெண் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 2.5 லிட்டர் நீர் குடிக்க வேண்டும். உடலில் நீர்சத்து இருந்தால், கிருமிகள் இயற்கையாக வெளியேற்றப்படும்.
தினமும் மலம் கழித்து முடித்ததும், முன்னே இருந்து பின் என்ற வகையில் கழுவ வேண்டும். பின்னிருந்து முன் என கழுவினால் கிருமியின் தாக்கம் அதிகரிக்கும். துர்நாற்றம், அரிப்பு மற்றும் வெள்ளைப்படுதல் பிரச்சனை நமது செயல்பாடுகளை பொறுத்து மீண்டும் ஏற்படலாம். அதனால் உடலை சரியாக பராமரிப்பது அவசியம். உடலையும், அந்தரங்க பகுதிகளையும் சரிவர கவனிக்காமல் இருந்தால் சிறுநீர் தொற்றும் ஏற்படும்.
நெல்லிக்காய் சாறு:
தினமும் ஒரு குவளையளவு நெல்லிக்காய் சாறினை குடித்து வந்தால், 48 நாட்களில் வெள்ளைப்படுதல் பிரச்சனை சரியாகிவிடும். நெல்லிக்காயில் உள்ள ஆன்டி-ஆக்சிடேடிவ் தன்மை வெள்ளைப்படுதலை சரியாக்கும்.
கற்றாழை சாறு:
கற்றாழை கர்ப்பப்பையை வலுப்படுத்தும் தன்மையில் முக்கிய இடத்தினை பெற்றுள்ளது. வெள்ளைப்படுதல், இரத்தப்போக்கு, பி.சி.ஓ.டி., கர்ப்பப்பை புற்றுநோய் என அனைத்து பிரச்சனையையும் சரி செய்கிறது. 48 நாட்களில் வெறும் வயிற்றில் கற்றாழை சாறுடன் கருப்பட்டி அல்லது பனங்கற்கண்டு சாறு கலந்து குடித்து வந்தால் மேற்கூறிய பிரச்சனை சரியாகும்.
அன்னாசிப்பூ:
அன்னாசிப்பூ வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கு நல்ல தீர்வினை தரும். கிருமி தொற்றால் ஏற்படும் வெள்ளைப்படுதலை சரி செய்யும். அன்னாசிப்பூவினை இடித்து குவளையில் நீர் விட்டு கொதித்து வடிகட்டி குடிக்கலாம். இதனைப்போல தயிர் மற்றும் மோரினை உணவில் அவ்வப்போது சேர்த்துக்கொண்டால், வெள்ளைப்படுதல் பிரச்சனையை சரி செய்யலாம்.
மாதவிடாய் நாட்கள்:
மாதவிடாய் காலத்தில் நாளொன்றுக்கு குறைந்தது 3 முதல் 5 முறை சானிட்டரி நாப்கின்னை மாற்றம் செய்வது நல்லது. மாதவிடாய் நாட்களுக்கென தனித்தனி உள்ளாடை உபயோகம் செய்யலாம். வெயிலில் உள்ளாடைகளை கட்டாயம் காய வைக்க வேண்டும். இதனால் அதில் உள்ள கிருமிகள் அழியும்.
பிறப்புறுப்பை கழுவுதல் (Vaginal Wash):
தயிரை பிறப்புறுப்பில் தடவிக்கொண்டு, அரைமணிநேரம் கழித்து கழுவ வேண்டும். தயிரில் சிறிதளவு மஞ்சள் சேர்த்து கொண்டால் நலம். இதனைப்போல், கற்றாழை ஜெல்லை பிறப்புறுப்பில் தேய்த்து, 20 நிமிடம் கழித்து அதனை கழுவலாம். இதனால் வெள்ளைப்படுதல் மற்றும் பிறப்புறுப்பில் ஏற்பட்டுள்ள கிருமி தொற்று சரியாகும்.
பிற ஆலோசனைகள்:
இறுக்கமான உடைகளை அணிவதை தவிர்க்க வேண்டும். அதனைப்போல, இறுக்கமான உள்ளாடைகளும் அணிய கூடாது. லெக்கின்ஸ், ஜெக்கிங்ஸ் என்று அழைக்கப்படும் இறுக்கமான ஆடைகளை அணிய வேண்டாம். சிந்தடிக் உள்ளாடையை தவிர்க்க வேண்டும்.
காற்றோட்டமான மற்றும் சரியான அளவுள்ள பருத்தியினால் ஆன உள்ளாடைகளை அணிய வேண்டும். இயன்றளவு இந்திய வகை கழிவறைகளை (IWC - Indian Water Closet) உபயோகப்படுத்த வேண்டும். சூடான நீரை வைத்து குளிப்பது, அந்தரங்க உறுப்புகளை கழுவது போன்றவை கூடாது. உடல் ஏற்றுக்கொள்ளும் வகையில் உள்ள இளஞ்சூடு நீர் சிறந்தது. முடிந்தளவு, அறை வெப்பநிலையில் உள்ள தண்ணீரை பயன்படுத்தி குளிக்கலாம்.
சர்க்கரை உணவுகள், துரித உணவுகளை தவிர்ப்பது சாலச்சிறந்தது. வித்தியாசமான உணவுகளை சாப்பிட ஆசையிருந்தால், அதனை வீட்டில் செய்து சாப்பிடலாம். வாசனை மிகுந்த சோப்களை அந்தரங்க பகுதிகளில் உபயோகம் செய்வதை தவிர்க்க வேண்டும். அந்தரங்க பகுதிகளில் வாசனை பவுடர் போன்றவற்றையும் உபயோகம் செய்ய கூடாது. மாதவிடாய் நாட்களில் 3 மணிநேரத்திற்கு ஒருமுறை நாப்கினை மாற்ற வேண்டும்.