மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மழை காலம் வந்துவிட்டது! உயிரை கொள்ளும் டெங்கு காய்ச்சலில் இருந்து தப்பிக்க அருமையான வழிகள்!
பொதுவாக மழைக்காலம் ஆரம்பித்துவிட்டாலே கொசுக்கள் அதிகரிக்க ஆரம்பித்துவிடும். கடந்த ஆண்டு டெங்குவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகம். அதிகமான இறப்புக்கு காரணம் போதிய அளவு முன்னெச்சிரிக்கை நடவடிக்கைகளில் இறங்காததுதான் காரணம்.
மழைக்காலம் தொடங்கும் போது, கொசுக்கள் முட்டையிட்டு, அதிலிருந்து அதன் இனத்தை விருத்தி அடைய செய்கிறது. பெருகி வரும் இந்த கொசுக்களால் மனிதர்களுக்கு டெங்கு காய்ச்சல் வருகிறது.
அறிகுறிகள்
தலை வலி, குமட்டல் வாந்தி, கண்ணனுக்கு பின்புறம் வலி, பசியின்மை தொண்டைப்புண், அரிப்பு ஏற்படும். இதனால் உங்கள் உடலில் உள்ள வெள்ளை அணுக்கள் பாதிக்கப்பட்டு டெங்கு காய்ச்சல் அதிகரிக்கிறது.
காய்ச்சல் வந்தால் ..?
எந்த ஒரு காய்ச்சலாக இருந்தாலும், அதனுடன் வாந்தி குமட்டல், தலைவலி என இருக்கும் போது சாதாரண காய்ச்சல் என எண்ணி மருத்துவரிடம் செல்லாமல் இருக்க கூடாது. மருத்துவரை அணுகி உடனடியாக தேவையான சிகிச்சை பெறுவது நல்லது. பொதுவாக டெங்கு பரவும் சமயங்களில் அதாவது மழைக்காலங்களில் காய்ச்சல் வந்தால் உடனே மருத்துவரை அணுகி பரிசோதித்துக்கொள்வது மிகவும் நல்லது.
பொதுவாகா டெங்கு காய்ச்சல் வந்துவிட்டால் அதை சரி செய்வதற்கு என்று தனியாக மருந்து மாத்திரைகள் கிடையாது. அது போன்ற சமயங்களில் அதிக அளவு நீர் அருந்தவேண்டும். பழச்சாறு அதிகம் அருந்த வேண்டும். அதிலும் குறிப்பாக குழந்தைகளுக்கு தேவையான தண்ணீரை கண்டிப்பாக கொடுக்க வேண்டும். நீர் சத்து குறையாமல் பார்த்துக் கொள்வது நல்லது.
காய்ச்சலை வராமல் தடுப்பது எப்படி ..?
கொசு கடியிலிருந்து பாதுக்காத்துக்கொள்ள கொசு வலைகளை, கொசுவத்தி, க்ரீம்கள் போன்றவற்றை பயன்படுத்தி கொசு கடிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வீட்டை சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
குழந்தைகள் வெளியில் விளையாட செல்லும் போது உடல் முழுதும் கவர் செய்தவாறு உள்ள ஆடைகளை அணிய செய்ய வேண்டும்.
மாலை நேரத்தில், குறிப்பாக 4 மணி முதல் 7 மணி வரை வீட்டின் ஜன்னல் கதவை மூடி இருக்க வேண்டும்.
நொச்சித்தழை கொண்டு புகை ஏற்படுத்தலாம்.
இது போன்று செய்து வருவதால், கொசு கடியிலிருந்து தம்மை பாதுகாத்து டெங்கு பீவரிலிருந்து விடுபடலாம்