மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மழைக்காலங்களில் நோய் எதிர்ப்புச்சக்தியை அதிகரிக்கும் பழங்கள்.. கட்டாயம் இதை சாப்பிடுங்க.!!
தென்மேற்கு பருவமழை முடிந்து வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள காரணத்தால், தொற்று நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க, சத்து மிகுந்த பழங்களை உண்ண வேண்டும். இது குறித்து தற்போது காணலாம்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆப்பிள் சாப்பிட வேண்டும். ஆப்பிளில் வைட்டமின் சி இருக்கிறது. மாதுளையில் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் அதிகம் இருப்பதால், குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது. மேலும் ரத்தத்தையும் சீராக்குகிறது.
வாழைப்பழத்தில் வைட்டமின் பி6 அதிகம் இருக்கிறது. மழைக்காலத்தில் குழந்தைகளின் செரிமான மண்டலத்தை சீராக்க உதவுகிறது. பேரிக்காயில் நார்ச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் சி அதிகமாக இருப்பதால் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
மழைக்காலங்களில் நம்மை சுற்றிஇருப்பதையும் சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியம். மேலும் மழைக்காலங்களில் வெதுவெதுப்பான தண்ணீரை குடித்து வருவதன் மூலம் நோய் தொற்று ஏற்படும் அபாயத்தை குறைக்கலாம்.